பேஸ்புக் நேரலை நிகழ்ச்சி மூலம் சரியான சிக்சரை அடித்திருக்கின்றனர் 'சென்னை 28 - II' அணியினர்

பேஸ்புக் நேரலை நிகழ்ச்சி மூலம் சரியான சிக்சரை அடித்திருக்கின்றனர் \'சென்னை 28 - II\' அணியினர்

புறா வழி தூது, செய்தி தாள், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம்  ஆகியவற்றை தொடர்ந்து தற்போது மக்கள் இடத்தில பிரபலமாய் இருப்பது சமூக வலைத்தளங்கள்....அந்த சமூக வலைத்தளத்தை தங்களின் முக்கிய கருவியாய் எடுத்து கொண்டு, சென்னை 28 - II  படத்தை மிக சரியான முறையில் விளம்பர படுத்தி இருக்கின்றனர் இயக்குநர் வெங்கட் பிரபுவும் அவருடைய குழுவினரும்...சமீபத்தில் பேஸ்புக் - தலைமை செயலகம் - ஹைதெராபாத்தில் நடைபெற்ற பேஸ்புக் நேரலை நிகழ்ச்சி மூலம், திரைப்படங்களை விளம்பர படுத்தும் யுக்தியில்  புதியதொரு சாதனையை படைத்திருக்கின்றனர் சென்னை 28 - II' அணியினர் .  ஒரே நேரத்தில் 8 லட்சம் ரசிகர்களை ஈர்த்த இந்த நேரலை நிகழ்ச்சியை ஐந்தாயிரம் பேர் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி 2,50,000 இணைத்தள வாசிகளும், 6000 கருத்துக்களும் இந்த நேரலை நிகழ்ச்சிக்கு பதிவானது மேலும் சிறப்பு.

சென்னை 28 - II படக்குழுவினரும், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ரசிகர்களும் பங்குபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி சுமார் 55 நிமிடங்கள் நடைபெற்றது..... கேள்வி பதில், கிரிக்கெட்  தொடர்பான வினாடி வினா போட்டி, சென்னை 28 - II படத்தின் பாடல்களை திரையிடுவது என பல சிறப்பம்சங்கள் பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில் இடம்பெற்று, ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. எப்போதுமே அதிகம் பேசாத யுவன்ஷங்கர் ராஜா, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களோடு கலந்துரையாடியது, ஒட்டுமொத்த இணையத்தள வாசிகளையும் அதிகளவில் கவர்ந்து விட்டது.... சென்னை 28 - II படத்தின் 'நீ  கிடைத்தாயோ' பாடலின் பிரத்தேக காட்சிகளை இந்த பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில்  'சென்னை 28 - II' அணியினர் வெளியிட்டனர்.

தொகுப்பாளர் ரம்யா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமீபத்தில்  'புரோப்பைல் பிரேம்'  என்னும் விளம்பர யுக்தியை கையாண்டு, 85 ஆயிரத்திற்கும் அதிகமான  ரசிகர்களின் உள்ளங்களை சென்னை 28 - II படக்குழுவினர் வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

"ஒரு திரைப்படத்தை முறையாக சமூக வலைத்தளங்களில் எப்படி  விளம்பர படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள், 'ட்ரெண்ட் லௌட்' நிறுவனம்...இதுவரை யாரும் கண்டிராத புத்தம் புதிய யோசனையை  வழங்கி, சென்னை 28 - II படத்தை ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்து வரும்  'ட்ரெண்ட் லௌட்'  நிறுவனத்திற்கு   நன்றிகள்....." என்றார் வெங்கட் பிரபு உற்சாகத்துடன்.

வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், மிர்ச்சி சிவா, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜய் வசந்த், மகேஸ்வரி, நாகேந்திரன்இயக்குநர்  மற்றும் படத்தொகுப்பாளர் பிரவீன் ஆகியோர் இந்த பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில்  கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top