இரட்டை வேடத்தில் முதல்முறையாக விஜய் ஆண்டனி!
Posted on 08/08/2017

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரில் இருந்து ஹீரோவாக அறிமுகமாகி தனக்கு பொருத்தமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்கு பிறகு எமன், சைத்தான் படங்கள் சுமாராக போனதால் அடுத்த படத்தை கவனமுடன் பார்த்து பார்த்து நடித்து வருகிறார்.
அண்ணாதுரை என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் அண்ணா, துரை என்ற இரு வேடங்களில் விஜய் ஆண்டனி நடிப்பதாக செய்தி வந்திருக்கிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் இரட்டை வேடங்களில் நடித்த நடிகர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
அண்ணாதுரை படம் முடிந்த பிறகு விஜய் ஆண்டனி சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. பகலவன் கதை விஜய் நடிக்க வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News, Hero, Star