ஐ.நா சபையில் பரத நாட்டியம் ஆட இருக்கும் ஐஷ்வர்யா தனுஷ்

ஐ.நா சபையில் பரத நாட்டியம் ஆட இருக்கும் ஐஷ்வர்யா தனுஷ்

உலக மகளிர் தினத்தையொட்டி ஐ.நா சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் நடிகர் ரஜினி காந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆட இருக்கிறார்.

மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில், இந்திய கலாச்சாரத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ஐஸ்வர்யா தனுஷ் நம் நாட்டின் நடன கலைகளுள் ஒன்றான பரத நாட்டியத்தை ஐ.நா.வில் அரங்கேற்ற இருக்கிறார்.

இந்நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இந்தியாவிலிருந்து முதன்முறையாக நடனமாட அழைக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இந்தியாவின் சார்பில் எம்.எஸ்.சுப்புலெட்சுமி ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக பாடியுள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், மகளிர் தினத்தையொட்டி பல்வேறு நாடுகளின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேற இருக்கின்றது. இந்நிகழ்சியில், இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஐ.நா.வுக்கான இந்தியப் பிரதிநிதி ஆகியோரும் பங்கேற்க இருக்கின்றனர்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top