சிவகார்த்திகேயனுக்கு வில்லி சிம்ரன்?
Posted on 21/11/2017

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' என அடுத்தடுத்து இரு வெற்றிப் படங்களைத் தந்த சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளது. இதுவும் பக்கா காமெடிதான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக, முதல் முறையாக சமந்தா நடிக்கிறார்.
சிவகார்த்திகேயனுடன் சமந்தா மட்டுமல்ல, இன்னும் இரு முக்கிய சீனியர் நடிகர்களும் முதல்முறையாக நடிக்கிறார்கள். அவர்கள் சிம்ரன் மற்றும் நெப்போலியன். சிவகார்த்திகேயன் தந்தையாக நெப்போலியனும், வில்லியாக சிம்ரனும் நடிக்கிறார்கள் என்று தகவல்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்தப் படத்தின் இந்த படத்தின் முதல் போஸ்டர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
Tags: News, Hero, Star