வித்தியாசமான முறையில் காதலர் தினத்தைக் கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்! உற்சாகத்தில் மிதந்த குழந்தைகள்!

வித்தியாசமான முறையில் காதலர் தினத்தைக் கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்! உற்சாகத்தில் மிதந்த குழந்தைகள்!

'வேலன்டைன்ஸ் டே' என்றாலே டேட்டிங் என்ற பெயரில் ஊர் சுற்றுவது என இன்றைய தலைமுறை ஒரு மோசமான ஃபார்முலாவை உருவாக்கி வைத்திருக்கிறது. அதனாலேயே காதலர் தினத்தை வெறுப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

நடிகை சாக்ஷி அகர்வாலும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் தருபவர். அவர் காதலிப்பது ஆதரவற்ற குழந்தைகளை என்பது ஹைலைட்!
 
ஆம், காதலர் தினத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவது, அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சாக்ஷி.
 
தான் நடித்த 'குட்டி ஸ்டோரி' படம் ரிலீஸான உற்சாகத்திலிருக்கும் நேரமாகப் பார்த்து காதலர் தினம் வருகிறது. அதே உற்சாகத்தோடு, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள 'நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்' என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி, கலந்து பழகி, அவர்களோடு விளையாடி மகிழ்வித்து திரும்பியிருக்கிறார். அதுதான் தன்னுடைய காதலர் தினக் கொண்டாட்டம் என்கிறார்.
 
அவரிடம் பேசினோம்... '' 'வேலன்டைன்ஸ் டே'வை  உலகம் பார்க்கிற பார்வை வேற. நான் அதை மனுஷங்க மேல மனுஷங்க அன்பு செலுத்துறதுக்கான தினமாத்தான் பார்க்கிறேன். யார் வேணாலும் யார் மேல வேணாலும் அன்பு செலுத்தலாம். எனக்கு ஆதரவற்ற குழந்தைகள் மேல அன்பு செலுத்துறது பிடிச்சிருக்கு. அவங்கதான் என்னோட காதலர்கள். அதனால, காதலர் தினத்தை அவங்களோட கொண்டாடுறேன். 
 
மூணு வருஷத்துக்கு முன்னே, 'ஃபுட் ஃபார் டூ'ங்கிற (Food for Two) கான்செப்ட்ல காதலர் தினத்தைக் கொண்டாடினேன். அதாவது 'ஒரு மனுஷன் இரண்டு பேருக்கு உணவு கொடுத்தாலே போதும்; நாட்டுல ஏழைகளுக்கு பசி பட்டினி இருக்காது'ங்கிற விழிப்புணர்வை உருவாக்குறதுக்காக பண்ணது அது. 
 
போன வருஷ காதலர் தினத்தை, 'எய்ட்ஸ்' பாதித்த பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கான ஒரு காப்பகத்துல அவர்களைத் தொட்டுப் பேசி பழகி, சாப்பாடு கொடுத்து கொண்டாடினேன். 'எய்ட்ஸ் பாதித்தவங்களை தொடுறதால நமக்கு எய்ட்ஸ் தொற்றாது; அவங்களை தொட்டுப் பழக தகுதியற்றவர்களா நினைக்கிறது தப்பு'ங்கிறதை எடுத்துச் சொல்றதுக்கான முயற்சியா அதை பண்ணேன்.
 
இந்த வருஷம், கிட்டத்தட்ட 100 ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிற 'நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்' காப்பகத்துல காதலர் தினத்தைக் கொண்டாடினேன். மனசுக்கு அவ்ளோ ஹேப்பி... இது அடுத்தடுத்த வருஷமும் தொடரும்'' என்றார்.
 
'குட்டி ஸ்டோரி' படத்தையடுத்து சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'சின்ட்ரெல்லா' படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள 'டெடி' படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கேரக்டரில் நடித்துள்ளார். அடுத்ததாக, சாக்ஷி அகர்வால் ஒப்பந்தமாகியுள்ள படம் 'தி நைட்.' விலங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரமாக நடிக்கப் போகிற அந்த படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்னும் சில நாட்களில் துவங்கவிருக்கிறதாம். 'அரண்மனை 3'யிலும் நடிக்கவிருக்கிறார் என்பது சாக்ஷி பற்றிய அடுத்த அப்டேட்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top