அதிகம் பொய் சொல்லும் நடிகை கிரிக்கெட் வீரருடன் காதலா?

அதிகம் பொய் சொல்லும் நடிகை கிரிக்கெட் வீரருடன் காதலா?

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதல் என்ற தகவல் பற்றி விளக்கம் அளித்துள்ளார் பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா. பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா ஜியோமி செல்போன் குறித்து ட்விட் போட்டார். சைக்கிளின் புகைப்படத்தை மட்டும் போட்டு லவ் இஸ் இன் தி ஏர் என்றார். இதை பார்த்துவிட்டு கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பதில் அளித்தார். பதிலுக்கு பரினீத்தியும் ட்வீட்டினார். 

ஹர்திக் பாண்டியா, பரினீத்தி சோப்ராவின் ட்வீட்டுகளை பார்த்த ரசிகர்களோ இருவரும் காதலிப்பதாக பேசத் துவங்கினார்கள். சமூக வலைதளங்களில் காதல் பேச்சாக இருந்தது. பாலிவுட் நடிகை ஒருவரும், கிரிக்கெட் வீரரும் காதலிப்பது புதிது அல்ல. தற்போதைய கேப்டன் விராட் கோஹ்லி கூட பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிக்கிறார். 

ஆளாளுக்கு தன் காதல் பற்றி பேசுவதை பார்த்த பரினீத்தி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பரினீத்தியிடம் காதல் பற்றி கேட்கப்பட்டது. நான் சிங்கிளா இல்லையா என்பது வாதம் அல்ல. ஆனால் நான் ஹர்திக் பாண்டியாவை காதலிக்கவில்லை. காதல் வதந்தி குறித்து நானும் கேள்விப்பட்டேன் என்று பரினீத்தி தெரிவித்துள்ளார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top