ஜுங்காவில் 2வது ஹீரோயினாக நேகா ஷர்மா?
Posted on 22/11/2017

விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்தில் நடிகை நேகா ஷர்மா இரண்டாவது ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'காஷ்மோரா' படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கவுள்ள புதிய படம் ஜுங்கா. விஜய் சேதுபதி 20 கோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார். சாயிஷா சைகல், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். ஜுங்கா படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இரண்டாவது ஹீரோயினாக நடிகை நேகா ஷர்மாவை ஒப்பந்தம் செய்ய படக்குழு அணுகியுள்ளது.
இதற்கு நேகா ஷர்மா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது. ஆனால் நேகா ஷர்மா தொடர்பான காட்சிகளை டிசம்பர் அல்லது ஜனவரியில் காட்சியாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இரண்டாவது ஹீரோயின் ரோலில் நேகா ஷர்மா பாவடை தாவனி கெட்டப்பில் நடிக்கவுள்ளாராம். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலாகுமாரா படத்திற்குப் பிறகு இணைந்துள்ள விஜய்சேதுபதி - கோகுல் கூட்டணியில் உருவாகும் ஜுங்காவில் விஜய் சேதுபதி டான் ஆக நடிக்கிறார். யோகி பாபு காமெடி ரோலில் நடிக்கவுள்ளார்.
Tags: News, Hero, Star