அழகாக இருப்பதால் பல படங்களில் நிராகரிப்பு!
Posted on 25/11/2017

பத்மாவதி படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகாவிற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தனர். அவர் தலையை கொண்டுவந்தால் ரூ. 10 கோடி பரிசு என்று அறிவித்தனர். இதனால் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு வீட்டில் முடங்கி இருக்கிறார் தீபிகா.
இந்நிலையில் ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: "நான் நடிக்க வந்த போது இந்தி பட உலகில் படுக்கைக்கு சென்றால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். அதிஷ்டவசமாக பட வாய்ப்புக்காக நான் அனுசரித்து போகவில்லை. நான் அழகாக இருப்பதாலும் சில பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்.
"நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். இந்த கதைக்கு ஒத்துவர மாட்டீர்கள்" என்று என்னை நிராகரித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags: News, Hero, Star