ஓட்டல் தொழிலில் முதலீடு செய்யவிருக்கும் நடிகை அனுஷ்கா!

ஓட்டல் தொழிலில் முதலீடு செய்யவிருக்கும் நடிகை அனுஷ்கா!

நடிகை அனுஷ்காவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இதனால் அவர் சம்பாதித்த பணத்தை ஓட்டல் தொழிலில் முதலீடு செய்து சொந்தமாக புதிய ஓட்டல்கள் திறக்க முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.
 
நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு பட உலகில் 12 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அருந்ததியில் மந்திரவாதியை பந்தாடிய ஆக்ரோஷமும், பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் ராணியாக வந்து வாள் வீசியதும், இஞ்சி இடுப்பழகி படத்தில் 20 கிலோ எடை கூடி குண்டு பெண்ணாக வந்ததும் இவரது நடிப்பு திறமையை பறைசாற்றுவதாக அமைந்தன. வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், லிங்கா, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்கள் அனுஷ்கா நடிப்பில் வந்து ரசிகர்களை கவர்ந்தன. இவருக்கு தற்போது 36 வயது ஆவதால் பட வாய்ப்புகள் குறைகின்றன. பாகுபலி இரண்டாம் பாகம், ஓம்நமோ வெங்கடேசாய, சி-3, பாக்மதி ஆகிய 4 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. இந்த படங்களிலும் அவர் நடித்து முடித்து விட்டார். சி-3 படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து மற்ற படங்களும் வெளியாக இருக்கின்றன.
 
வேறு புதிய படங்கள் எதிலும் அனுஷ்கா ஒப்பந்தமாகவில்லை. வயது முதிர்ச்சியால் இளம் கதாநாயகர்கள் ஜோடி சேர தயங்குவதும் புதிய கதாநாயகிகள் வரத்து அதிகரித்து இருப்பதும் அனுஷ்கா மார்க்கெட்டில் சரிவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
 
அனுஷ்காவுக்கு விரைவில் திருமணத்தை முடித்து விட குடும்பத்தினர் ஆர்வம் காட்டுகிறார்கள். மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அனுஷ்கா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா வாய்ப்பு இல்லாததால் ஓட்டல் தொழிலில் ஈடுபட அனுஷ்கா திட்டமிட்டு இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது. சம்பாதித்த பணத்தை ஓட்டல் தொழிலில் முதலீடு செய்ய இருக்கிறார் என்கின்றனர்.
 
ஐதராபாத்திலும், சென்னையிலும் ஓட்டல்கள் திறக்க முடிவு செய்து இருக்கிறார். ஏற்கனவே பல நடிகைகள் ரியல் எஸ்டேட், நகைக்கடை, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது என்று இதர தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags: News, Hero, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top