பாக்மதியிலும் கலக்கும் தேவசேனா!

பாக்மதியிலும் கலக்கும் தேவசேனா!

'பாகுபலி' படத்தின் மூலம் சினிமாவில் உச்சிக்குச் சென்றார் நடிகை அனுஷ்கா. இன்னும் 'பாகுபலி' படத்தில் தேவசேனாவாக அவரது தோற்றமும், காட்சிகளும் பலராலும் மறக்க முடியாது. இப்படம் உலக அளவிலும் வரவேற்பை பெற்று இன்னும் வசூலில் பல சாதனைகள் புரிந்து கொண்டிருக்கிறது. அவரின் சினிமா படங்கள் வரிசையில் 'அருந்ததி', 'பாகுபலி' படங்கள் முக்கிய இடங்களைப் பிடித்துவிட்டன.

இதனைத் தொடர்ந்து அவர் காமெடியும் ஹாரரும் கலந்த கதையான 'பாக்மதி' படத்தில் நடித்துள்ளார். அசோக் என்பவர் இயக்கும் இந்தப் படத்தின் அனுஷ்காவுடன் ஆதி, உன்னி முகுந்தன், ஜெயராம், அஷா சரத் ஆகியோர் நடிக்கின்றனர். 'பாகுபலி' படத்திற்கு முன்பே உடல் எடை பிரச்சனையால் சிரமப்பட்டு வந்த அனுஷ்கா தொடர்ந்து யோகா மூலம் சமீபத்தில் தனது இலக்கை எட்டியிருக்கிறார். தற்போது 'பாக்மதி' படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.

இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 'பாகுபலி' போலவே இதிலும் சில கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கின்றனவாம். படம் வரும் 2018 ஜனவரியில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top