நடிகர் வினுசக்ரவர்த்தி மரணம்! நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்!!

நடிகர் வினுசக்ரவர்த்தி மரணம்! நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்!!

பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி (74) சென்னையில் போலிஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை  ஆரம்பித்து,  பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் அவர்களிடம் கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

'ரோசாப்பூ ரவிக்கைகாரி' படம் மூலம் திரைக்கதை  எழுதி நடிகராக  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு 'வண்டி சக்கரம் ','கோயில் புறா','இமைகள்', 'பொண்ணுக்கேத்த புருஷன் ' ஆகிய படங்களுக்கு கதை-திரைக்கதை, வசனம் எழுதி துணை இயக்குனராகவும்  பணி புரிந்தார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், படுகா,இந்தி,ஆங்கிலம் போன்ற மொழிகளில் 1003 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படம் சீரடி சாய்பாபா.

தனது இயல்பான நடிப்பால் மக்கள் அனைவரையும் கவர்ந்த இவர் நேற்று (வியாழக்கிழமை) காலமானதை அறிந்து அதிர்ச்சியுற்றோம்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது. 

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top