செப்.25-ஆவது சாமி 2 ஆரம்பமாகுமா?

செப்.25-ஆவது சாமி 2 ஆரம்பமாகுமா?

ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் விக்ரம். அதனால் அவருக்கு ஏராளமாக இழப்புகள். திட்டமிட்டபடி படங்கள் முடியாமல் இழுத்துக் கொண்டபோகும் சூழல் அடிக்கடி ஏற்பட்டதால் புதிய படங்களை கமிட் பண்ண முடியாமல் அவதிப்பட்டார். இது தொடர்கதையாகிப்போனதால் தற்போது தன் கொள்கையை மாற்றிக் கொண்டார் விக்ரம். அவரது கைவசம் இப்போது 3 படங்கள்! விஜய் சந்தர் இயக்கும் 'ஸ்கெட்ச்' படம் அவற்றில் ஒன்று. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளிவருகிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் 'துருவநட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விக்ரம் இம்மாதம் 24-ஆம் தேதி சென்னை திரும்புகிறார். 25-ஆம் தேதி முதல் ஹரி இயக்கத்தில் 'சாமி-2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்கவிருக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் ஹரி இன்னொரு பக்கம் சற்று கலக்கத்துடன்தான் இருக்கிறார்.

இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை மேலும் 15 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டு கௌதம் மேனன் குட்டையைக் குழப்பிவிடுவாரோ என்ற சந்தேகத்திலேயே படப்பிடிப்புக்கான ஏற்பாட்டை செய்து வருகிறார். கடந்த ஜூன் மாதமே சாமி-2 படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டியநிலையில், கௌதம் மேனன் செய்த குழப்பத்தினால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top