நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்!

நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்!

நடிகர் பிரதாப் போத்தன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பணிபுரிந்துள்ளார்.
 
பல விருதுகளுக்கு சொந்தக்காரரான பிரதாப் போத்தன் இன்று நம்முடன் இல்லை. அதாவது அவர் உடல்நலக் குறைவால் இன்று 8 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.
 
அதாவது 70 வயதான அவர் உடல்நலக் குறைவால் இன்று 8 மணி அளவில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
 
கடைசியாக பிரதாப் போத்தன் மம்முட்டியின் CBI5 The Brain என்ற படத்தில் நடித்திருந்தார்.
 
பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை 1985ம் ஆண்டு திருமணம் செய்தார், ஆனால் இருவரும் 1986ம் ஆண்டே பிரிந்தார்கள். பின் அமலா சத்யநாத் என்பவரை மறுமணம் செய்த பிரதாப் 2012ம் ஆண்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top