நடிகர் மன்சூரலிகானின் இசை ஆல்பம் “டிப் டாப் தமிழா“ அவரே பாடல்வரிகளை எழுதி, இசையமைத்து, பாடி, நடித்துள்ளார்

நடிகர் மன்சூரலிகானின் இசை ஆல்பம் “டிப் டாப் தமிழா“ அவரே பாடல்வரிகளை எழுதி, இசையமைத்து, பாடி, நடித்துள்ளார்

தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தி வந்த மன்சூர் அலிகான் தற்போது பிஸியான காமெடியனாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

நடிகர் மன்சூரலிகான் 1994 ஆம் ஆண்டே சில்க் சிமிதாவை வைத்து “ சிக்குச்சான் சிக்குச்சான்  சிக்குசிக்குச்சான்   “ என்ற இசை ஆல்பத்தை ஏழு தெம்மாங்கு பாடல்களை கொண்டு தயாரித்து வெளியிட்டிருந்தார் அந்த பாடல்கள் அப்போதே மக்கள் மத்தியில் பிரபலமானது. அதுமட்டுமல்லாது அவர் நடித்த “ ராஜாதிராஜ ராஜகுலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் என்ற படத்திற்கு ஐந்து பாடல்களோடு இசையமைத்து அசத்தியிருந்தார்.
 
அதை தொடர்ந்து தற்போது “ டிப் டாப் தமிழா “ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார். இதில் அரசியல் விழிப்புணர்ச்சி பாடல், சமூகம், காதல், பாசம், உணர்வுகள் என்று பல பரிமாணங்களை கொண்ட ஆறு பாடல்களை கொண்டு இந்த  “ டிப் டாப் தமிழா “ இசை ஆல்பத்தை உருவாக்கியதோடு,அதற்கு பாடல் வரிகளை எழுதி, பாடி, இசையமைத்து, நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சமூகம் சார்ந்த பலவகையான சிந்தனைகளை மக்களுக்கு இந்த பாடல்கள் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அதோடு இன்றைய அரசியலை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த ஆல்பத்தை உருவாக்கி இருப்பதாகவும், நல்ல ஆடியோ கம்பெனியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இதன் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த போவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top