ஓவியாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பரிந்துரைத்ததே நான்தான்... கிருஷ்ணா!

ஓவியாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பரிந்துரைத்ததே நான்தான்... கிருஷ்ணா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் புகழை சம்பாதித்து ஓவியாவை அந்நிகழ்ச்சிக்கு பரிந்துரை செய்தது நான்தான் என்று நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் விஜய் டிவிக்கு லாபம் கிடைத்ததா? என்பது தெரியாது. ஆனால் இந்த நிகழ்ச்சியால் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தவர் ஓவியாதான். அவர் கண்டிப்பாக வின்னராகத்தான் வெளியே வருவார், அவ்வாறு வெளியே வந்தவுடன் அஜித், விஜய் படங்கள் உள்பட பிசியாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது உண்மை.

இந்நிலையில் ஓவியாவை இந்த நிகழ்ச்சிக்கு நான் தான் பரிந்துரை செய்தேன் என்று அவருடன் நடித்த நடிகர் கிருஷ்ணா கூறியுள்ளார். கிருஷ்ணா நடித்த 'யாமிருக்க பயமே' படத்தில் ஓவியாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் டிவி தரப்பினர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு போட்டியாளரை பரிந்துரை செய்யுங்கள் என்று கிருஷ்ணாவிடம் கேட்டபோது அவருக்கு உடனே ஓவியாவின் ஞாபகம் தான் வந்ததாகவும் உடனே அவரை பரிந்துரை செய்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் ஓவியா தனது இயல்பான கேரக்டருடன்தான் 'பிக் பாஸ்' வீட்டில் இருக்கிறார். எனவே அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top