பிரபல இயக்குனரின் கதையை குப்பை என கூறிய நடிகை!
Posted on 27/11/2017

பிரபல இயக்குனரின் கதையை குப்பை என்று கூறி ஸ்க்ரிப்ட்டை தூக்கி எறிந்துள்ளார் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா. கரண் ஜோஹார் இயக்கத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, கஜோல் நடித்த படம் குச் குச் ஹோத்தா ஹை. இந்தி படமாக இருந்தாலும் பிற மொழி ரசிகர்களுக்கும் அந்த படம் மிகவும் பிடித்தது. இன்று வரை பலர் கொண்டாடும் படமாக அது உள்ளது.
இந்நிலையில் படம் குறித்து நடிகர் அக்ஷய் குமார் கூறியிருப்பதாவது,
குச் குச் ஹோத்தா ஹை படத்தில் ராணி முகர்ஜி கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கரண் ஜோஹார் முதலில் என் மனைவி ட்விங்கிளிடம் தான் கேட்டிருக்கிறார். ஸ்க்ரிப்ட்டை படித்துப் பார்த்த ட்விங்கிளுக்கு அது பிடிக்கவில்லை. இது எல்லாம் ஒரு கதையா குப்பை என்று கூறி ஸ்க்ரிப்ட்டை தூக்கி வீசிவிட்டார் ட்விங்கிள். ட்விங்கிள் நடிக்க வேண்டிய டீனா கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜி நடித்தார். நான் தான் உனக்கு வாழ்க்கை கொடுத்தேன் என்று ட்விங்கிள் அவரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், 2.O குறித்து கூறும் போது, 2.O பட இயக்குனர் ஷங்கர் இயக்குனர் அல்ல அவர் ஒரு விஞ்ஞானி. படத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும். இது எப்படி நடந்தது என்று வியப்பீர்கள். இந்த படம் இந்தியாவுக்கு வெளியேயும் பெரிய அளவில் ஹிட்டாகும் திறன் கொண்டது என்றார் அக்ஷய் குமார்.
Tags: News, Hero, Star