ஒரு முரட்டுத்தனமான காதல் கதையாக உருவாகியுள்ள படம் 'இமை'
Posted on 11/06/2017

இது படு கரடுமுரடான வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதை. இப்படத்தை இயக்கியிருப்பவர் விஜய் கே.மோகன். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் 'நளசரிதம் நாலாம் திவசம்' ,'வேனல் மரம்' என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். படத்தை ஜே அண்ட் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்பிக் வி. டோரி தயாரித்துள்ளார். முற்றிலும் புதுமுகங்களின் ஆதிக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
நாயகனாக சரிஷ் அறிமுகமாகிறார். நாயகியாக அட்சய பிரியா நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தமிழில் நடித்து இரண்டு படங்கள் வெளியாகவுள்ளன. பிரகாஷ் ராஜின் மைத்துனரும் டிஸ்கோ சாந்தியின் சகோதரருமான அருண் திருமொழி வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் விஜய் கே. மோகன் தான் இயக்கும் முதல் படம் பற்றிப் பேசும்போது,
"திறமைகளுக்கும் புதுமைகளுக்கும் என்றும் தமிழில் வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்தத் தைரியத்தில் தான் தமிழில் படம் இயக்கியுள்ளேன்" என்கிறார் இயக்குநர்.
"ஒரு நாள் ரயிலில் கேட்ட ஒருவரது ஆச்சரியமான உண்மைக்கதையையே 'இமை' படமாக உருவாக்கியிருக்கிறேன்." என்கிறார். சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி. ஊட்டி, கேரளாவிலுள்ள கோவிந்தபுரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஐம்பது நாட்களில் பம்பரமாகச் சுழன்று படத்தை முடித்திருக்கிறது படக்குழு.
நல்லதொரு விஷூவல் ட்ரீட்டாக இருக்கும்படி ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் வி.கே.பிரதீப். இவர் ஏராளமான விளம்பரப் படங்களில் பணியாற்றியவர். இசையமைப்பாளர்கள் மிக்கு காவில் மற்றும் ஆதிஃப் என இருவர் இணைந்து இசையமைத்துள்ளனர். பாடல்கள்- யுகபாரதி, நடனம் _ தீனா, ஸ்டண்ட் - டேஞ்சர் மணி, ஒப்பனை மிட்டா ஆண்டனி. ஜூலையில் 'இமை' வெளியாகவுள்ளது.
Tags: News, Hero, Lifestyle, Star