பெண்களின் அனைத்து நோய்களுக்கும் ஹோமியோபதி சிகிச்சை!

பெண்களின் அனைத்து நோய்களுக்கும் ஹோமியோபதி சிகிச்சை!

இன்றைய புதுமைப் பெண்கள், பழமையை விரும்புவதில்லை அல்லது அவற்றை புரிந்துகொள்ள வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகிறது. தற்பொழுது கூட்டுக்குடும்ப வாழ்க்கை என்பது கிட்டத்தட்ட இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது.

இதனால் மூத்தவர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லை. இயங்கும் சூழ்நிலையிலேயே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. மூத்தோர்கள் பின்பற்றிய உணவு முறைகளை பின்பற்றத் தயக்கம். மேலும் அவை கேவலம் என்ற உணர்வை வளர்த்துக்கொண்டும் விட்டோம்.

மேலும் இல்லத்தரசிகளும் சரி, பணிபுரியும் மகளிரும் சரி, சீரற்ற உணவுகளைக் (Junk Food) கூட, சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை. மேலும் சாப்பிடும் போதும், அளவுக்கு மீறி சாப்பிடுவதால் கலோரிகள் ததும்பும் கொழுப்புச்சத்து உடலில் சேர்கிறது. தற்போதைய வாழ்வு முறைகளில் இவ்வளவு கலோரிகளை எரிப்பதற்காக உடல் உழைப்பு / முயற்சிகள் அரிதாகவே உள்ளன. இவைகளின் விளைவு உடல் பருமன். இது சர்க்கரை நோய், தைராய்டு, கருமுட்டை கட்டி, வெரிகோஸ் வெயின், இரத்த அழுத்த பிணிகளுக்கு வழிவகுக்கின்றன.

சரியான மருத்துவரின் ஆலோசனைகள் மூலமாக, உடல் வலியிலிருந்து விடுதலை பெறுவதே, ஆரோக்கிய வாழ்வின் முதற்படி, வலியில்லா உடல், அவரது உற்பத்தித் திறனையும், திறமைகளையும் மேம்படுத்தி வாழ்வை செழிக்கச் செய்யும். எனவே நமது தாய் தந்தையர்கள் பின்பற்றிய சரியான உணவு முறைகள். நல்ல உடல் முயற்சி மன வலிமையுடன் கூடிய வாழ்க்கை முறை, முறையான மருத்துவ ஆலோசனைகள் ஆகியவை இன்று பெண்களுக்கு இன்றியமையாதது என்பதனை உணருதல் வேண்டும்.

பக்கவிளைவுகள் இல்லாத உடற்கூறுகளின் அடிப்படையிலான, விஞ்ஞான பூர்வமான ஹோமியோபதி மருத்துவம் பெண்களின் பிணிகளுக்கும் உடல் பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாகும். ஆங்கில மருத்துவத்தால் குணபடுத்த முடியாத நாள்பட்ட நோய்களுக்கு ஹோமியோபதி முறையில் பூரண நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலே சொல்லப்பட்ட பெண்களுக்கான அனைத்து நோய்களுக்கும் ஹோமியோபதி மூலமாக சிறப்பான நிரந்தர குணம் கிடைக்கும் என்பது உறுதியாகச் சொல்லப்படலாம்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியது: Dr. Nisha Krishnan, BHMS, M.Sc, Madurai Homeopathy, 97, வடக்கு வெளி வீதி, சிம்மக்கல் பேருந்து நிறுத்தம் அருகில், மதுரை - 625 001.Cell : 9442050880

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top