நெஃப்ரோஜெனிக் டயபெட்டிக் இன்சிபிடஸ் என்ற பாதிப்பைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை!

நெஃப்ரோஜெனிக் டயபெட்டிக் இன்சிபிடஸ் என்ற பாதிப்பைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை!

நீரிழிவு நோயாளிகளில் சிலருக்கு கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு சிறுநீர் வெளியேறும். மரபியல் கோளாறு காரணமாக ஏற்படும் இத்தகைய நீரிழிவு பாதிப்பைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை அறிமுகமாகி, நல்ல பலனை அளித்து வருகிறது மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்மில் சிலருக்கு அதிக அளவு தாகம் ஏற்படும். இதற்காக அவர் போதிய அளவு தண்ணீர் அருந்தினாலும் அடிக்கடி தாகம் எடுத்துக்கொண்டேயிருக்கும். அதே தருணத்தில் இவர்களுக்கு அதிக அளவில் சிறுநீரும் வெளியேறும். இதைத்தான் மருத்துவர்கள் நெஃப்ரோஜெனிக் நீரிழிவு இன்சிபிடஸ் பாதிப்பு என வகைப்படுத்துகிறார்கள். 
 
எம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வடிகட்டி சிறுநீராக வெளியேற்றும் பணியினை சிறுநீரகங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இதற்கு எம்முடைய மூளையில் உள்ள பிட்யூற்றரி சுரப்பியிலிருந்து anti diuretic hormone என்ற ஹோர்மோனின் சுரப்பு இதனை கட்டுப்படுத்த உதவி செய்கிறது. இந்த ஹோர்மோனின் உற்பத்தியில் ஏற்றத்தாழ்வான நிலை மற்றும் செயல்பாட்டில் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டால் இத்தகைய பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். எம்மில் சிலருக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்பின் காரணமாக, அவர்களின் உடலில் நீர்ச்சத்திற்கு ஆதாரமான திரவ அளவை சம சீரான நிலையில் கட்டுப்படுத்த இயலாது.
 
அதிகமாக தாகம் எடுப்பது, வெளிர் நிறத்தில் சிறுநீர் அதிக அளவு வெளியேறுவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக தாகத்தின் காரணமாக குளிர்பானங்களை அருந்துவதற்கு முன்னுரிமை கொடுப்பது... இத்தகைய பாதிப்பின் அறிகுறிகள் என்பதால், மேற்கூறிய அறிகுறிகள் ஏற்பட்டால், அவர்களுக்கு நெஃப்ரோஜெனிக் டயபெட்டிக் இன்சிபிடஸ் என்ற பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம். இவர்கள் இயல்பான அளவை விட நாளாந்தம் கூடுதலாக 18 முதல் 19 லீற்றர் அளவு வரை சிறுநீரை வெளியேற்றுவார்கள். சிலருக்கு இதன் காரணமாக உடலின் நீர்ச்சத்து பாதிக்கப்படும். 
 
இத்தகைய நீரிழிவு நோயாளிகளுக்கு Central diebetes insipidus, nephrogenic diabetes insipidus, gestational diabetes insipidus, primary polydipsia போன்ற வகைகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
 
இவர்களுக்கு மூளையில் உள்ள பிட்யூற்றரி சுரப்பியின் செயல்பாடுகள் மற்றும் அமைப்பு கண்டறிய எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, water deprivation test என்ற பரிசோதனை, ஜெனிடிக் ஸ்கிரீனிங் எனப்படும் மரபணு பரிசோதனை, சீறுநீரகங்களின் அமைப்பு மற்றும் அதன் வடிக்கட்டும் திறன் குறித்த பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை செய்து பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவார்கள்.
 
இத்தகைய பாதிப்புகளை முழுமையாக குணப்படுத்தும் சிகிச்சை கண்டறியவில்லை என்றாலும், தாகத்தை கட்டுப்படுத்தும் சிகிச்சையும், அதிக அளவு சிறுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் சிகிச்சையும் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் இதிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெற இயலும்.
 
டாக்டர். ராஜேஷ்
தொகுப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top