மோனோஜெனிக் டயபெட்டிக் எனப்படும் நீரிழிவு பாதிப்பிற்குரிய சிகிச்சை

மோனோஜெனிக் டயபெட்டிக் எனப்படும் நீரிழிவு பாதிப்பிற்குரிய சிகிச்சை

உலகம் முழுவதும் 420 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் நீரிழிவு நோயாளிகளாக இருக்கிறார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருக்கிறது. அதிலும் தற்பொழுது 20 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மோனோஜெனிக் டயபெட்டிக் எனப்படும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். தற்போது மோனோஜெனிக்  டயபெடிக் பாதிப்பிற்கு சிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக மருத்துவ ரீதியிலான விளக்கங்களை கேட்பதற்காக சென்னையைச் சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர் Dr. நல்ல பெருமாள், M.D., Dip.in.Diab., அவர்களைச் சந்தித்தோம்.

மோனோஜெனிக் டயாபட்டிக் என்றால் என்ன?
 
Maturity-Onset Diabetes of the Young என மருத்துவ ரீதியாக குறிப்பிடப்பட்டாலும், இதனை Monogenic Diabetes என்ற நீரிழிவு நோய் என்றே மருத்துவத் துறையினர் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாததிப்பு தற்போது இளைய தலைமுறையினரிடைய அதிகரித்து வருகிறது. பொதுவாக எம்முடைய உடலியக்கத்திற்கு தேவையான சக்தி குளுக்கோஸ் மூலமே கிடைக்கிறது. இந்த குளுக்கோசின் அளவானது ரத்தத்தில் குறிப்பிடத்தக்க அளவே இருக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னரும், சாப்பிடுவதற்கு பின்னரும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்திருக்கிறது. எம்மில் பெரும்பாலானவர்களுக்கு இந்த குறிப்பிடத்தக்க அளவைவிட அதிக அளவில் குளுக்கோஸ் இருப்பதைத் தான் நீரிழிவு நோய் என குறிப்பிடுகிறோம். எம்முடைய கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹோர்மோன் தான், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த சுரப்பியின் செயல்பாட்டில் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டால் நீரிழிவு நோய் உண்டாகிறது.
 
இதற்கான அறிகுறிகள் என்ன?
 
இத்தகைய சர்க்கரை நோயிற்கு அதிக அளவிலான சோர்வு தான் முதன்மையான அறிகுறியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. வேறு சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிப்பது அதிகப்படியான பசி, தாகம், கண் பார்வை பாதிப்பு, உடல் எடை குறைவு, கை மற்றும் கால்களில் உணர்வின்மை அல்லது மதமதப்பு போன்ற அறிகுறிகளும் ஏற்படும். 
 
சர்க்கரை நோயின் வகைகள் எத்தனை?
 
டைப் 1, டைப் 2, ஜேஸ்டேஷனல் டயபெடிக் எனப்படும் கர்ப்பகால சர்க்கரை நோய், மோனோஜனிக் டயபெட்டிக், லாடா, மைட்டோகாண்ட்ரியல் டயபெட்டிக் என பலவகையாக நீரிழிவு பாதிப்பை வகைப்படுத்தலாம்.
 
காரணங்கள்..?
 
எம்முடைய உடலிலுள்ள அதிகப்படியான குளுக்கோஸை இன்சுலின் குளுக்கோஜென்னாக மாற்றி கல்லீரல் மற்றும் தசைப்பகுதிகளில் சேமித்து வைக்கிறது. இத்தகைய பரிமாற்றத்திற்கு Glucokinase எனப்படும் என்சைம் தேவைப்படுகிறது. இந்த என்சைமின் பற்றாக்குறையின் காரணமாகவே இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.
 
உடல் உழைப்பின்மை, உடல் பருமன், இரத்த அழுத்த பாதிப்பு, துரித உணவுகள், கார்பனேட்டட் குளிர்பானங்கள் போன்றவற்றின் காரணமாக உடலில் ரத்த சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்பட்டு சர்க்கரை நோயாக மாறுகிறது. 20 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டும்தான் MODY எனப்படும் மோனோஜெனிக் டயபெடிக் பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை, இரண்டு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான் என்றாலும், இதன் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இது மரபணு மாற்றத்தால் பரம்பரை பரம்பரையாக இத்தகைய பாதிப்பு தொடர்கிறது.
 
மோனோஜெனிக் டயபடீஸ் 11 வகை உள்ளது. இதில் பெரும்பான்மையானவர்களுக்கு டைப் 2 மற்றும் டைப் 3 எனப்படும் வகையால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு குறிப்பிடத்தக்க பிரத்யேக மரபணு, குளுக்கோஸின் வளர்சிதை மாற்றத்தில் இயல்பான அளவைவிட கூடுதலாக பாதிப்பை ஏற்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.
 
சிறுநீரகங்களில் ஏற்படும் நீர்க்கட்டிகள் போன்ற ஒரு குறிப்பிட்ட மரபணு மாற்றத்தால் இதய பாதிப்பு உருவாகிறது. அதிக உடல் எடை மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்பின் போது டைப்-1 எனப்படும் இன்சுலின் சுரக்காத பாதிப்பு அதிகமாக ஏற்படுவதில்லை பெரும்பான்மையானவர்களுக்கு டைப்-2 எனப்படும் சர்க்கரை நோய் தான் உண்டாகிறது.
 
இதற்கான பிரத்யேக பரிசோதனையும் சிகிச்சையும் குறித்து..?
 
இத்தகைய பாதிப்பை மரபணு பரிசோதனை, ரத்த பரிசோதனை மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்படும். அவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு இன்சுலின் பயன்பாடு தேவைப்படுவதில்லை. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சத்தான உணவு, உடற்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவற்றை உறுதியாகக் கடைபிடித்தால், இத்தகையப் பாதிப்பை ஆயுள் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள இயலும்.
 
பச்சிளங்குழந்தைகளுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுமா?
 
ஏற்படும் பிறந்து ஆறு மாத காலத்திற்குள் இத்தகைய சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். மேலும் இத்தகைய மோனோஜெனிக் டயபெட்டிக் பாதிப்பு குழந்தை பிறந்து 6 மாத காலத்திற்குள் ஏற்படும். இதில் Permanent Neonatal Diabetes மற்றும் Transient Neonatal Diabetes என இரண்டு வகையான பாதிப்புகள் ஏற்படும்.
 
ஆறு மாத பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்தப் பரிசோதனை மற்றும் மரபணு பரிசோதனை செய்து இதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறது. சில பச்சிளம் குழந்தைகளுக்கு மூன்று மாத காலம் வரை தொடர்ச்சியாக சிகிச்சை தேவைப்படலாம். பிறகு அவர்களுக்கு இந்த பாதிப்பு குறையும். வேறு சிலருக்கு இந்த பாதிப்பு நாட்பட்ட பாதிப்பாக மாற்றம் பெறும். அவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு முறையும், வாழ்க்கை நடைமுறையும் மாற்றி அமைத்துக் கொண்டால் சர்க்கரை நோயை ஆயுள் முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இயலும். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 99400 50344 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top