குழந்தைகளை தாக்கும் மோபியஸ் நோயி (Moebius Syndrome)ற்கான சிகிச்சை!

குழந்தைகளை தாக்கும் மோபியஸ் நோயி (Moebius Syndrome)ற்கான சிகிச்சை!

உலக அளவில் பிறக்கும் 50 ஆயிரம் குழந்தைகள் முதல் 5 லட்சம் குழந்தைகளுக்குள் ஒரு குழந்தைக்கு அரிதாக ஏற்படும் மோபியஸ் நோயிற்கான முழுமையான நிவாரணம் வழங்கும் சிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக உலக அளவில் 300 மில்லியன் மக்கள் அரிய வகை நோய் பாதிப்புகளால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறை தொடர்ந்து பல்வேறு நவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகள் மூலம் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் மோபியஸ் சிண்ட்ரோம் எனப்படும் நரம்பியல் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இதன் காரணமாக முகத்தில் உள்ள தசைகள் பலவீனமடைகிறது. மூளை நரம்புகளின் இயங்கு திறனில் ஏற்படும் தடைகளால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு முகபாவனை இருப்பதில்லை. குறிப்பாக இவர்களால் சிரிக்கவோ... முகம் சுளிக்கவோ.. புருவங்களை உயர்த்தவோ.. இயலாது. முக தசைகள் பலவீனமாக இருப்பதால் இவர்கள் தாய்ப்பால் அருந்துவதிலும் கூட தடை ஏற்படக்கூடும். இதற்காக மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் தற்போது நவீன வடிவிலான பால் புகட்டும் கருவியை கண்டறிந்திருக்கிறார்கள்.
 
இத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள், கண்களின் இயக்கம் மற்றும் முகத்திலுள்ள தசைகளை இயக்குவதில் கடுமையான சிரமங்களை எதிர் கொள்வார்கள். இவர்கள் பிறக்கும் போது உதடு, வாய்ப்பகுதி, நாக்கு, பற்கள் போன்றவற்றின் அமைப்பும், வளர்ச்சியும்  இயல்பான அளவைவிட குறைவானதாக இருக்கும். இத்தகைய பாதிப்பை மருத்துவத்துறை துறையினர் congenital facial paralysis என்றும் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு முகத்தின் இரண்டு பக்கங்களிலும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
 
பரம்பரை மரபணு மாற்றம் காரணமாகவும், வெகு சிலருக்கு சுற்றுச்சூழல் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவத் துறையினர் கண்டறிந்திருக்கிறார்கள். இத்தகைய பாதிப்புள்ள குழந்தைகள் வளரும்போது அவர்களின் நாக்கு, தாடை, குரல்வளை, தொண்டை போன்ற பல பகுதிகளின் வளர்ச்சியில் இயல்புக்கு மாறான தன்மை ஏற்படும். அதன் இயங்கு தன்மையிலும் வேறுபாடு உண்டாகிறது. இவர்களுடைய முகம், மூட்டு, தாடை ஆகிய பகுதியில் உள்ள தசைகளும், எலும்புகளிலும் வேறுபாடுகளைக் காணலாம்.
 
இதனை தற்போது பிசிக்கல் மற்றும் ஸ்பீச் தெரபி எனப்படும் ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் பெறுவதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய பாதிப்பால் கண்களில் ஏற்படும் பிரச்சனைக்கு கண் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று அதற்குரிய சத்திர சிகிச்சையை செய்து முழுமையான நிவாரணத்தை பெறலாம்.
 
டாக்டர். பார்த்திபன்
தொகுப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top