தைராய்டு பெண்களின் தலையாய பிரச்சனையாக மாறி வருகிறது

தைராய்டு பெண்களின் தலையாய பிரச்சனையாக மாறி வருகிறது

தைராய்டு சுரப்பியின் அளவு:
இளஞ்சிவப்பு நிறத்தில் குரல்வளைக்கு (Adam’s Apple) கீழே ஒரு பட்டாம்பூச்சியைப் போல் அமைந்திருக்கிறது. இதன் எடை 20 கிராம் முதல் 40 கிராம் வரையில் இருக்கும். இதிலிருந்து வெளியிடும் ஹார்மோன் அளவு ஒரு பங்கு தான். நாளமில்லாச் சுரப்பிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது “தைராய்டு சுரப்பியாகும்”.

தைராய்டு ஹார்மோன்கள்:
T3 - Triodothyroxin, T4 - Thyroxine, TSH – Thyroid Stimulating harmon.

தைராய்டு ஹார்மோன்களின் வேலைகள்:
செல் மற்றும் திசுக்களில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தின் மூலம் உடலில் வெப்பம் உண்டாக்கப்படுகிறது. நம் உடல் வளர்ச்சிக்கும், உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கும், தைராய்டு ஹார்மோன்கள் பெரிதும் உதவுகிறது. உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும் உதவுகிறது.

1. புரதப்பொருள்களை (protein) சிதைவுப்படுத்தி செல்களின் வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் உதவுகிறது. குளுகோஸ் (Glucose) உறிஞ்சப்படுவதை தூண்டுகிறது. 2. கிளைக்கோஜன் (Glycogen) சிதைவுபட உதவுகிறது. 3. கால்சியம் மற்றும் பாஸ்பரஸை எலும்புகளில் இருந்து அதிக அளவில் விடுபட வைக்கிறது. வைட்டமின் A உருவாக ஏதுவாக உள்ளது. 4. குழந்தைகளின் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 5. மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. 6. இதய துடிப்பை சீராக வைக்க உதவுகிறது. 7. குடலின் உறிஞ்சும் தன்மையை அதிகபடுத்துகிறது. 8. இனப்பெருக்க உறுப்புகளின் வேலைகள் சரியாக நடைபெற உதவுகிறது. 9. பால்சுரப்பு கோளங்களை தூண்டி அதிக அளவில் பாலை சுரக்க வைக்கிறது. 10. காற்றைக் கட்டுப்படுத்துவதால் நுரையீரல், இதயம் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது. வெப்பத்தை சீராக வைக்கிறது. கால்சியத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆற்றலை அளிக்கிறது.

தைராய்டு சுரப்பியிலிருந்து தைராக்சின் எனும் ஹார்மோன் (T4) சுரக்கிறது. தைராய்டு ஹார்மோன் உடலின் வெவ்வேறு விதமான செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கிய காரணமாகும். உடலில் நடைபெறும் வெவ்வேறு வளர்சிதை மாற்றங்கள் சீராக அமைய தைராய்டு ஹார்மோன்கள் உதவுகின்றன. பல்வேறு விதமான உபாதைகள் தைராய்டு சுரப்பியின் குறைபாட்டால் உண்டாகிறது. இந்த நோய் இளம் பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இது தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாவதால் உருவாகிறது.

ஆண்களைவிட பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை அதிகமாக வரக்காரணம், பெண்களுக்கு ஹார்மோன் அதிகமாக சுரப்பதால்தான் நாளமில்லாச் சுரப்பிகள் அதிகமாகும்போது உடலில் தேவையில்லாத இடங்களில் நிணநீர் அதிகமாகச் சேர்ந்து உடல் பருமனாவதுடன் மாதவிடாய் தாமதமாவதற்குக்கூட இது முக்கிய காரணமாக அமைகிறது.

தைராய்டு குறைவாக உற்பத்தியானால் 1. தைராய்டைடிஸ் எனும் தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைவு. இதனால் தைராய்டு சுரப்பி வீக்கமடைகிறது.  2. அயோடின் குறைபாடு, இதனால் உலகம் முழுவதும் தோராயமாக 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு சுரப்பி தைராய்டு ஹார்மோன் சுரக்க அயோடினை பயன்படுத்துகிறது. 3. செயல்படாத தைராய்டு சுரப்பி, இந்நோய் பிறக்கும் 4000 குழந்தைகளில் ஒரு குழந்தையினைப் பாதிக்கிறது. இதனை சரி செய்யாவிட்டால் அந்த குழந்தை உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது. 4. அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல் அதன் மூலம் அதிக இரத்தப்போக்கு ஏற்படுதல். 5. போஸ்ட்பார்டம் தைராய்டைடிஸ் என்பது 5 முதல் 7 சதவீதம் பெண்களிடம் குழந்தை பெற்றபின் ஏற்படக்கூடிய ஒரு தற்காலிகமான நோய். 6. உடல் எடை கூடுதல், 7. சோர்வு மற்றும் மறதி, 8. உலர்ந்த, தடியான தோல் மற்றும் உரோமம், 9. கரகரப்பான குரல், 10. குளிரினை பொறுத்துக் கொள்ள முடியாமை.

ஆலோசனைக்கு: 9677732086

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top