குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்குரிய நிவாரணம்

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்குரிய நிவாரணம்

இன்றைய தேதியில் பல பச்சிளம் குழந்தைகளுக்கு Colic எனப்படும் வயிற்று வலி ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. இதற்கு தற்போது முழுமையான நிவாரணம் அளிக்கும் தீர்வும் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இன்றைய சூழலில் கணவன் - மனைவி இருவரும் பணிக்கு சென்று வருவாய் ஈட்டினால்தான் குடும்ப மேன்மைக்கும், நன்மைக்கும் பலனளிக்கும். இதன் காரணமாக பெரும்பாலான தம்பதிகள் தங்களுக்கு பிறந்த பச்சிளம் குழந்தைகளை வீட்டில் உள்ள மூத்த குடும்ப உறுப்பினர்களிடம் அளித்துவிட்டு, வேலைக்கு செல்கிறார்கள். மாலை நேரத்தில் அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் குழந்தை வயிற்று வலியால் அழும் பொழுது தாய்மார்களுக்கு மன அழுத்தமும் ஏற்படுகிறது. அந்த குழந்தை எதன் காரணத்தினால் அழுகிறது? என தெரிந்து கொள்வதற்காக மருத்துவர்களிடம் அழைத்துச் செல்கிறார்கள். அவர் பரிசோதனை செய்துவிட்டு, குழந்தைக்கு பால் போத்தலில் தருகிறீர்களா..! என மருத்துவர் கேட்கும் பொழுது, 'ஆம்' என தம்பதிகள் தலையசைக்கிறார்கள். 
 
போத்தலில் பால் அருந்தும் குழந்தைகள் பாலுடன் காற்றையும் சேர்த்து உறிஞ்சுவதால் வயிற்றுப் பகுதியில் அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டு Colic வயிற்று வலி உண்டாகிறது. இதனை களைவதற்காக தற்போது சந்தையில் Anti Colic Valve என்ற தொழில்நுட்பத்தில் தயாராகி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் போத்தலை பால் புகட்டுவதற்காக பயன்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த தொழில்நுட்பத்தில் பச்சிளம் குழந்தைகள் போத்தலிலிருந்து பாலை மட்டும் உறிஞ்சுகின்றன. இதன் காரணமாக குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படுவதில்லை என மருத்துவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
 
டாக்டர்.தனசேகர்
தொகுப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top