நலம் தரும் மருத்துவ ஆலோசனை!

நலம் தரும் மருத்துவ ஆலோசனை!

‘நான் தான் முக்கேஷ்’ இந்த வசனத்தை பலரும் அடிக்கடி திரையரங்கில் வீடியோவாக கண்டிருப்பீர்கள். எத்தனை பேரின் மனதை அந்த முக்கேஷ் காணொலி வாயிலாக மாற்றியுள்ளாரோ தெரியாது. ஆனால் வாய்புற்றுநோய் என ஒன்று இருக்கிறது என்பது முக்கேஷ் மூலம் மக்களால் அறியப்பட்டது.

வாய் புற்றுநோய் என்பது தலை மற்றும் கழுத்துப்பகுதியைக் தாக்கும் ஒரு வகையான புற்றுநோய். இந்த புற்றுநோயின் செல்கள் வாயின் அடிப்பகுதி, ஈறு, நாக்கின் அடிப்பகுதி, கன்னம் போன்ற இடங்களில் தோன்றிப்பின் கொஞ்சம் கொஞ்சமாக பரவுகிறது. வாய்புற்று நோய்க்கு முக்கிய காரணமாக அமைவது ‘நிக்கோடின்’. இந்த நிக்கோடின் புகையிலை, பான்ஃபராக் கில்தான் அதிகளவில் காணப்படும். இந்த நிக்கோடின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து பின் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது. இத்தோடு வெற்றிலையும், பாக்கு, சுவிங்கமும் புற்றுநோய் ஏற்படுத்துவதாக சில ஆய்வுகள் தெளிவுப்படுத்துகின்றன.

இருப்பினும் இது பயப்படக்கூடிய நோயல்ல, விழிப்புணர்வுடன் இருக்கக்கூடிய நோய். இந்த நோயை தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் நிச்சயம் 95% குணப்படுத்திவிடலாம். வாயில் குறிப்பிட்ட இடத்தில் வலி, விழுங்கும்போது வலி ஏற்படுதல், வாய்நாற்றம், எச்சில் வழிதல், வாயில் சிகப்பு மற்றும் வெள்ளை புண், வயிற்று எரிச்சல், குரல் மாற்றம், அடிக்கடி இருமல், ஈறுகளில் இரத்தம் வருதல், சுவையின்மை, எடை குறைதல் போன்ற அறிகுறிகள் இருப்பின் வாய்ப் புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவரை அணுகி வாயை பரிசோதிக்க வேண்டும்.

புற்றுநோய் கண்டறியப்பட்டு அவை ஆரம்ப நிலையில் இருந்தால் அவற்றை மருத்து, மாத்திரை மூலமும் Radio Therapy, Chemo Therapy கதிர்வீச்சு மூலமும் சரிசெய்யலாம். ஒரு வேளை அதிகமாக இருப்பினும் அறுவை சிகிச்சை முறையில் முற்றிலும் குணப்படுத்தி விடலாம். மதுரை ரூபா பல் மருத்துவமனையில் தற்போது வாய் மற்றும் பற்களுக்காக சிகிச்சையளிப்பதோடு வாய்புற்றுநோயை நவீன தொழில்நுட்பமுறையில் லேசர் மூலம் குணப்படுத்தி வருகிறோம்.

Tags: News, Beauty, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top