நலம் தரும் மருத்துவ ஆலோசனை - Dr.தர்மேஷ் குமார்

நலம் தரும் மருத்துவ ஆலோசனை - Dr.தர்மேஷ் குமார்

ஒரு பெண் ஆரோக்கியமாக இருந்தால்தான் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். நம்முடைய வீட்டிலேயோ அல்லது நமக்கு பழக்கப்பட்டவர்களோ கர்ப்பம் தரித்தால் உடனே அவர்களின் மீது நமது அதிகப்படியான கவனத்தை திருப்பி அவர்களுக்கு தேவையான போஷாக்கான உணவையும், விரும்பியதை அளித்தும் கவனித்துக் கொள்கிறோம். இருப்பினும் ஒரு சில காரணங்களினால் சில துர்சம்பவங்களும் ஏற்பட்டு விடுகிறது.

இதற்கு நாம் சற்றும் நினைத்துப்பார்த்திடாத ஒரு பிரச்சனை தான் தமது பங்கினை வகிக்கிறது. அதுதான் பல். பெண்களின் உடலில் சுரந்திடும் ஈஸ்ட்ரோஜன் அல்லது புரோஜஸ்ட்ரோன் போன்ற ஹார்மோன்கள் கூடவோ அல்லது குறைவாகவோ சுரப்பதினால் ஈறுகளில் இரத்தம் கசிதல், ஈறுகளில் வீக்கம், சொத்தைப் பற்கள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற பிரச்சனைகள் வயிற்றில் உள்ள குழந்தையை நேரடியாக தாக்குகிறது. மேலும் பற்களின் சுத்தத்தையும் ஆடும் பற்களையும் கவனிக்காமல் இருத்தல் போன்றவையும் பிரச்சனையை வரவழைக்கிறது. இதன் விளைவு குறைப்பிரசவம், எடைக்குறைந்த நிலையில் பிறத்தல், உடல்வளர்ச்சியும் மனவளர்ச்சியும் குன்றி பிறத்தல், இறந்து அல்லது பிறந்த சில மணிநேரத்திலே இறத்தல், காது கோளாறு மற்றும் மூச்சுத் திணறலுடன் பிறத்தல் போன்ற சூழல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. மேலும், தாய்க்கு கருக்கலைப்பு, மாதவிடாய் கோளாறு, ஹார்மோன்களின் நிலையற்ற தன்மை, பிரசவ நீரழிவு, கருத்தரிப்பதில் காலத்தாமதமும் ஏற்படுகிறது.

எனவே, பெண்கள் பல் துலக்கும் போது இரத்தக் கசிவு, ஈறுகளில் வீக்கம், ஈறுகளின் இறக்கம், சிவந்த நிற ஈறுகள், பல்சொத்தை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது மருத்துவத்தில் இதற்காக லேசர் சிகிச்சைகள் குறைந்த செலவில் எளிய முறையில் செய்யப்படுகிறது. இதனால் பற்களில் வலியோ அல்லது அசவுகரியமோ இருக்காது. பற்களின் பாதுகாப்பு! தாய் சேயின் பாதுகாப்பு!

தொடர்புக்கு:  9176241808

Tags: News, Beauty, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top