ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில், துணை சேர்மன் ஆனந்தம்மாள் 15வது ஆண்டு நினைவு தினம்!

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில், துணை சேர்மன் ஆனந்தம்மாள் 15வது ஆண்டு நினைவு தினம்!

மாரத்தான் போட்டி, மௌன ஊர்வலம், ரத்ததானம்! இயக்குநர் முனைவர் சசிஆனந்த் துவக்கி வைத்தார்!!

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில், கலசலிங்கம் கல்வி குழும நிறுவனரும், தலைவரும் ஆன 'கல்விவள்ளல்' தி. கலசலிங்கம் அவர்கள் துணைவியார் துணைத்தலைவர் க.க.ஆனந்தம்மாள் 15 வது ஆண்டு நினைவு அஞ்சலி பல்கலைக்கழக வளாகம், மற்றும் ராமச்சந்திராபுரம் ஊரில் அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலை இயக்குநர் முனைவர் சசிஆனந்த், காலை பி. ராமச்சந்திரபுரம் கலைமகள் பள்ளியில் 'ஆனந்தம்மாள் திரு உருவச் சிலைக்கு' மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மாணவ மாணவியர்கள் மௌன அணிவகுப்பைத் துவக்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டி சுந்தரபாண்டியம் ஊர் தெருக்கலில் மௌனமாக சென்றனர்.

பின்பு கலசலிங்கம் பல்கலை வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கும், மாணவியர்களுக்கும் தனித்தனியே மாவட்ட மினி மாரத்தான் போட்டியை பல்கலை இயக்குநர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் கலசலிங்கம் தொழிற்நுட்பக் கல்லூரியிலிருந்து ஸ்ரீவி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் சி. சின்னையா துவக்கிவைத்தார்.

பல்கலை துணைவேந்தர் முனைவர் எஸ். சுரவணசங்கர் , பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன், கலசலிங்கம் கல்வி குழும முதல்வர்கள் துறை பேராசிரியர்கள், டீன்கள் சிறப்பு அதிகாரி எஸ்டேட் ஆபிஸர், ஆடிட்டர், ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர்;நலக்குழு, சிவப்பு நாடாகுழு, நாட்டு நலப்பணித்திட்டக்குழு, சார்பில், கல்லூரி முதல்வர் முனைவர் செல்வமணி தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. 225 மாணவ, மாணவியர்கள் இரத்ததானம் வழங்கினர். குன்னூர் ஆரம்ப சுகாதார டாக்டர் கீதா தலைமையில் மருத்துவக்குழு ரத்ததான ஏற்கும் பணிகளை செய்தன.

மினி மாரத்தான் ஓட்டப்பந்தய முடிவில் மாணவர் பிரிவில் சிவகாசி, எஸ். ஹெச். என்.வி, மேல்நிலைப்பள்ளி , முத்தையாவிற்கு முதல் பரிசு ரூ.1000, கோப்பை, சான்றிதழையும் முகவூர் எஸ். எஸ். என்.வி, மேல்நிலைப்பள்ளி, 2வது பரிசு ராம்குமாருக்கு ரூ.500, சான்றிதழையும் பல்கலை இயக்குநர் முனைவர் சசிஆனந்த் வழங்கினார்.

3 முதல் 10 மாணவர்களுக்கு ரொக்க பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவியர் பிரிவில், முதல்பரிசு சிவகாசி எஸ். ஹெச். என். வி மேல்நிலைப்பள்ளி ஜி. லாரா தாரணிக்கு ரூ.1000, கோப்பை, சான்றிதழையும் 2வது பரிசு இராமச்சந்திராபுரம் கலைமகள் மேல்நிலைப்பள்ளி எம். காளீஸ்வரிக்கு ரூ.500, சான்றிதழும். 3 முதல் 10 மாணவியர்களுக்கு ரொக்க பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முதல் 100 மாணவ, மாணவியர்களுக்கு டிசர்ட், வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பரிசினை பி. ராமச்சந்திராபுரம் கலைமகள் மேல்நிலைப்பள்ளி, முகவூர் எஸ்.எஸ்.என்.வி, மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளும் பகிர்ந்துகொண்டன.

உடற்கல்வி பயிற்சி இயக்குநர் விஜயலட்சுமி, செல்வகணேஷ், பிளஸ்லி, பொன்னியின் செல்வம், கார்த்திகேயன், உதயகுமார், முத்துராமலிங்கம் ஆகியோர் போட்டி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.

Tags: News, Academy, Institute, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top