மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற சி.இ.ஓ.ஏ. பள்ளி!

மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற சி.இ.ஓ.ஏ. பள்ளி!

1995-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சி.இ.ஓ.ஏ பள்ளிப் பாடலின் முதல்வரி ”சி.இ.ஓ.ஏ பள்ளி சிறுவர்கள் நாடும் பள்ளி” என்று ஆரம்பிக்கப்படுகிறது.  இன்று கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கடந்தும் சி.இ.ஓ.ஏ பள்ளி சிறுவர்களை ஈர்ப்பதை தொடர்ந்து செய்து வருகிறது.  சி.இ.ஓ.ஏ பள்ளி ஆரம்பிக்கப் பட்டபோது மதுரையில் புகழ் மிக்க பல பள்ளிகள் இருந்தன.
 
இருந்தாலும், மதுரை மக்களுக்கென்று ஆரம்பிக்கப்பட்ட சி.இ.ஓ.ஏ பள்ளி தற் போது மதுரையில் மட்டுமல்லாது, தமிழகத்தில் இருக்கும்  தலைசிறந்த பள்ளிகளுள் ஒன்றாய்த் திகழ்கிறது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை சி.இ.ஓ.ஏ மாணவர் கள் முதன் முதலாக எழுதியது 1999-ஆம் ஆண்டில் தான். ஆனாலும்,  பொன் விழா, வெள்ளிவிழா கொண்டாடிய பல்வேறு பள்ளிகளின் சாதனைகளையும் முறியடித்து, 2006-ஆம் ஆண்டிலேயே சி.இ.ஓ.ஏ பள் ளியின் மாணவர் 1100-க்கு 1067 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தின் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார். இந்த 1067 மதிப் பெண்கள் மூலம் அதற்கு முந் தைய தமி ழக அளவிலான முதல் மதிப்பெண்கள் அனைத்தையும் முறியடித்து சி.இ.ஓ.ஏ பள்ளி தமிழக அளவில் புதிய சாதனை படைத்தது.
 
2006-ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த சாதனையை அதன் பின்னர் அனைத்து வருடங் களிலும் சி.இ.ஓ.ஏ பள்ளியே தொடர்ந்து முறியடித்து வந் துள்ளது.  10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மட்டுமல் லாது 2017 ஆண்டு நடந்த +2 தேர்விலும் 1200-க்கு 1193 மதிப்பெண்கள் பெற்ற சாத னையும் சி.இ.ஓ.ஏ பள்ளி யையே சாரும்.  தற்போது, +2 பொதுத்தேர்வில் மதுரை மாவட்ட அளவில் ஏழு ஆண் டுகளாக தொடர்ந்து சி.இ. ஓ.ஏ பள்ளியே முன் னிலை வகித்து வருகிறது.   இதுமட் டுமல்லாது, மதுரை நகரில் +2 பொதுத்தேர்வில்  மாணவர் கள் 200-க்கு 200 மதிப்பெண் கள் பெறுவது, குறிப்பாக அறிவியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெறுவது என்பது மிகவும் அரிதாக இருந்த நேரத்தில் அதற்கான சிறப்புத் திட்டங் களை வகுத்து வருடா வரு டம் சி.இ.ஓ.ஏ பள்ளி நூற்றுக் கணக்காண 200-க்கு 200 மதிப் பெண்களை அள்ளிக் கொடுத்து அதிலும் சாதனை படைத்தது.
 
மதுரை மாநகர்  மகாத்மா காந்திநகரில் உள்ள சரஸ்வதி நதித்தெருவில் ஒரு வாட கைக் கட்டிடத்தில் ஆரம்பித்த பள்ளி தற்போது மூன்று மழ ழையர் பள்ளிகள், நான்கு மேல்நிலைப் பள்ளிகள் என்று ஆலவிருட்சமாய் பிரம்மாண்டமாக தனது கிளைகளை பரப்பி வளர்ந்து நிற்கிறது.  தற்போது மதுரை நகரில் மட்டுமல்லாது காரி யாபட்டி மற்றும் மேலூர் நகர ங்களிலும் சி.இ.ஓ.ஏ பள்ளி தனது கல்விப் பணியினை செவ்வனே செய்து வருகி றது. இதனால் மதுரை மக்கள் மட்டுமல்லாது கிராமப்புற மாணவர்களுக்கும் பயன் பெறும் வகையில் மாநிலத் தின் தலைசிறந்த கல்வி யினை சி.இ.ஓ.ஏ கல்விக் குழுமம் புகட்டி வருகிறது. மாறிவரும் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் சி.இ.ஓ.ஏ பள்ளி தற்போது நடைமுறையில் இருக்கும் மருத்துவத்திற்கான நுழை வுத் தேர்வான நீட் (NEET) தேர்விலும் முதல் ஆண்டி லேயே 28 மாணவர்களை எம்.பி.பி.எஸ்-ஸிற்கு அனுப்பி சாதனை படைத் துள்ளது. நடப்பாண்டில் நடை பெற்ற நீட் (NEET) நுழைவுத் தேர்வில் 42 மாணவர்களை எம்.பி.பி.எஸ்-ஸிற்கு அனு ப்பி சாதனை படைத்துள்ளது.   பள்ளிக் கல்வியில் மாநில அளவில் அளப்பறிய சாத னைகள் பல புரிந்த சி.இ.ஓ.ஏ கல்விக் குழுமம் தற்போது காரியாபட்டியில் ”சி.இ.ஓ.ஏ அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியை” ஆரம்பித்து கல்லூரிக் கல்வியிலும் தனது சாதனைகளை நிலைநாட்ட வந்துள்ளது. இக்கல்லூரியில் B.A(Tamil), B.A(English), B.Com., B.Com(CA), B.Sc(Maths), B.Sc(Physics), B.Sc(Chemistry), B.Sc(Computer Science)  ஆகிய பாடப்பிரிவுகள் உள் ளதோடு மட்டுமல்லாது மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் பல் வேறு வேலைவாய்ப்பு பயிற்சி சம்பந்தபட்ட படிப்பு களும் நடத்தப்படுகிறது அதில் விருப்பபட்ட மாண வர்கள் பயிற்சி மேற்கொண்டு பயன்பெறுகிறார்கள்.
 
இவ்வாறு பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, தமிழக மற்றும் இந்திய அளவிற்கான  மருத்துவ, பொறியியல் படிப்புகள் சார்ந்த தேர்வுக் கான பயிற்சிகள், சட்டம் மற் றும் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் படிப்புகள் சார்ந்த தேர்வுக் கான பயிற்சிகள் என்று சி.இ. ஓ.ஏ பள்ளி அனைத்து வகை யிலும் தன்னிகரற்ற பள்ளி யாக விளங்கிவருகிறது. சி.இ.ஓ.ஏ-வின் பள்ளிப் பாடலில் வரும்
 
”தளிர்கள் இங்குப் பயில வந்தால் மலர்களாய் உருவாகும் 
மலர்கள் இங்குப் பயில வந்தால் நிலவுகளாய் மாறும்
நிலவு இங்கு பயில வந்தால் சூரியனாய் மாறும்”  என்ற வரிகளுக்கேற்ப  சி.இ. ஓ.ஏ பள்ளியில் பயிலும் மாண வர்கள் அனைவரும் சூரிய னாய் மிளிர்கின்றனர் என்ப தில் சந்தேகமில்லை.
 
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலை பேசி எண்கள் 0452- 2533588, 2643612, 9344417272
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top