பாலிடெக்னிக் கணினி பொறியியல் தேர்வில் ஸ்ரீவி. கலசலிங்கம் மாணவி சாதனை!!

பாலிடெக்னிக் கணினி பொறியியல் தேர்வில் ஸ்ரீவி. கலசலிங்கம் மாணவி சாதனை!!

ஸ்ரீவி. கலசலிங்கம் பாலிடெக்னிக் மாணவி முத்துலட்சுமி சாதனை!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு கலசலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாம் ஆண்டு கம்யூட்டர் டிப்ளமோ பாடபிரிவில் படிப்பவர் வி. முத்துலட்சுமி இவர் கடந்த 2016 அக்டோபர் மாதம் நடைபெற்ற மாநில இரண்டாம் ஆண்டு முதல்பருவத்தேர்வில் மொத்தம் 700க்கு 699 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதல் இடம் பெற்றுள்ளார். மேலும், 6 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றும், ஒரு பாடத்தில் மட்டும் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்றும் சாதனை செய்துள்ளார்.

மாநில அளவில் டிப்ளமோ தேர்வில் முதல் இடம்பெற்று சாதனை புரிந்த மாணவி வி. முத்துலட்சுமியை கலசலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரி செயலர் முனைவர் கே. ஸ்ரீதரன், பல்கலைக்கழக இயக்குநர்கள் முனைவர் எஸ். சசிஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர். மேலும், பாலிடெக்னிக் முதல்வர் எம். கருணாநிதி, துறைத்தலைவர் கே. பி. ஸ்ரீதேவி, சிறப்பு அதிகாரி இலட்சுமணன் ஆகியோர் பாராட்டினர்.

Tags: News, Lifestyle, Academy, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top