"கல்வி" நிறுவனத்தின் மூலம் அனைவருக்கும் கல்வி சாத்தியமே!

\

கல்விச் செல்வம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அப்பெறக்கரிய செல்வம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற மேன்மையான நோக்கத்தோடும், சமூக சிந்தனையோடும் தொண்டாற்றி வரும் 'Kalvi Higher Education & Research Institute' கடந்த ஆறு வருடங்களாக 2011 முதல் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றது.

இக்கல்வி நிறுவனமானது “தொலைதூரக் கல்வி இயக்கம்” மூலம், அதுவும் தமிழகத்தில் தலைசிறந்த ஐந்து பல்கலைக்கழகங்களுடன் மேற்கொண்ட “புரிந்துணர்வு ஒப்பந்தம்” மூலம் எட்டாம் வகுப்பு (8th Std) முதல் பட்டயப்படிப்பு (Diploma) பட்டம் (Degree) மற்றும் பட்டமேற்படிப்பு அதாவது முதுகலைப்பட்டம் (Post Graduation) சான்றிதழ் படிப்பு (Certificate courses) ஆகியவற்றை மிகச் சிறப்பாக வழங்கி வருகின்றது.

“அனைவருக்கும் கல்வி சாத்தியமே” என்ற உன்னத உணர்வை இங்கு பயில்வோர் பெறுதல், இந்த நிறுவனத்தின் மிகச் சிறந்த வெற்றிப் பணியாகும். இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு தனி மனிதனுக்கும் அரசு மற்றும் தனியார் துறையின் அடிப்படை உரிமங்கள் பெற “கல்வி” என்பது அத்தியாவசியமான ஒரு தகுதியாக உள்ளது. இதனை மேம்படுத்த கல்வி நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான்-ல் தன் தொண்டையும் பணியையும் துவங்கியது.

இதன் முதற்கட்ட பணியானது, திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (MSU) உடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, முதலாம் ஆண்டிலேயே சுமார் 280 கிராமப்புற ஏழை மாணவர்கள் தொலைதூரக் கல்வியில் சேர்ந்து பயன் பெற்றனர்.

அதுமட்டுமில்லாமல், மேலும் நான்கு தலைசிறந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து எளிதில் பெற முடியாத / எட்டாக்கனியாகத் தெரிந்த பல பாடப்பிரிவுகளையும், எல்லோரும் பெற வழிவகை செய்தது.  இதன் மூலம்,  இந்த நாள் வரை சுமார் 4500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய கிராமப்புற மக்களும், நகர்புற மக்களும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பெற்று பலன் பெற்றுள்ளனர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (MSU)

மேற்காணும் பல்கலையுடன் இணைத்து 22 பட்ட படிப்புகள் (B.A, B.Sc., B.Com...) கலை, அறிவியல், சார்ந்தவை, 22 பட்டமேற்படிப்புகள் (M.A., M.Sc) 7 விதமான பட்டயப் படிப்புகள் (Diploma) மற்றும் தொழில்முறை முதுகலை பட்டங்களாக அங்கீகரிக்கப்பட்ட M.B.A., MCA ஆகிய படிப்புகளையும் வழங்கி வருகின்றது. இதில் குறிப்பாக MBA வில் மட்டும் 7 வகை உட்பிரிவுகளுடன் வழங்கி வருகின்றது.

மாணவர் சேர்க்கை முதல் அடையாள அட்டை பெறுதல், பாடப்புத்தகங்கள் வழங்குதல், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தல், செய்முறை வகுப்புகள், மாதிரி தேர்வு, இறுதி தேர்வு ஆகியவை பல்கலைக்கழகத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிறந்த பயிற்சியாளர்களால் வழங்கப்படுகிறது. தேர்ச்சி பெறும் மாணாக்கர்களுக்கு மதிப்பு கூட்டு சேவையாக அனைத்து சான்றிதழ்களையும் தங்களது இருப்பிடத்திலிருந்தே பெறும் வகையில் “கல்வி” நிறுவனம் கற்போர் கலர்ப்பூதும் வகையில் களைப்பில்லாமல் தொண்டாற்றும் இதன் பணியை வெற்றிகரமாக தொடர்கிறது.

பெரியார் பல்கலைக்கழகம் (Periyar University)

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “கல்வி” நிறுவனம் பல அரிய சிறந்த பாடப்பிரிவுகளின் கீழ் பட்டம் மற்றும் முதுகலை படிப்புகளை வழங்கி வருகின்றது.

சிறப்புமிக்க பட்டப் படிப்புகள் (U.G) சில,

B.A. (Education), B.B.A (Banking), B.B.A. (Hardware), B.B.A. (Networking), B.B.A (Sales & Marketing), B.B.A. (Telecommunication), B.A. (Astrology), B.A. (Home Science), B.Sc., Computer Science, B.Sc., Zoology, B.Sc. Botany, B.Sc. Telecommunication, B.Sc. Bio Technology, B.Sc. Microbiology, B.Sc. Hotel Management, B.Sc. Geography, B.Sc. Aviation & Tourism, B.Sc. Visual Communication, B.Sc. Textile & Fashion Design, B.Sc. IT,

P.G. பாடப்பிரிவுகள் சில, தொழில் சார்ந்த முதுகலை பட்டங்கள் சில, 

M.Sc., IT, MBA - International Business, MBA - Banking Management, MBA Textile Management, MBA - Marketing Management, MBA - Finance Management, MBA - Logistic & Supply Chain Management, MBA - Transport Management, MBA - Hospital Management, MBA - Hotel & Tourism Management, MBA - Airline & Airport Management, 

கலைசார்ந்த முதுகலை பட்டங்கள் சில, 

M.A. Human Rights, M.A. HRM மற்றும் Social welfare, Admin, Journalism & Mass Communication, Education, Geography, Rural Development, Psychology, Home Science,

அறிவியல் சார்ந்த சிறப்பம்ச முதுகலை படிப்புகள், 

M.Sc. Electronics, M.Sc. Bio Technology, M.Sc. - Micro Biology மற்றும் Telecommunication, Botany, Zoology, Computer Science, Geography,

உயரிய பட்டயப்படிப்புகளில் சில, 

PG Diploma in Multimedia, PG Diploma in CAD, PG Diploma in CAM, PG Diploma in Bio info matrix, Diploma in Air Hostess மற்றும் பல பட்டயப் படிப்புகளும் மொத்தம் 51 வகை உண்டு. அவற்றுள் சில Sericulture fire & safety, Leather Design, NSO Management, Hotel Management, Diploma in Mushroom ஆகிய அரிய வகை பிரிவுகளும் அடங்கும்.

சான்றிதழ் படிப்புகள் (8 Nos), 

Certificate courses in Auto cad & CATIA மற்றும் Auto Cad & Unigraphics, Women Empowerment, NGO Management, Lab Technology, Radio Image Tech, Retail Mgmt, Air Hostess.

“கல்வி”” தன் கல்வித் தொண்டினை பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “Kalvi College of Information Technology” - என்ற பெயரில் Regular course-களான M.Com, B.Com, B.B.A, B.Sc., Computer Science, MBA ஆகிய பட்டம் மற்றும் முதுகலை பட்டங்களையும் செவ்வனே வழங்கி வருகின்றது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU)

“கல்வி” நிறுவனம், மதுரை காமராசர் கல்கலைக்கழகத்துடன் இணைந்து 36 பட்ட படிப்புகள், 41 முதுகலை பட்ட படிப்புகள், 71 பட்டய படிப்புகள், 15 சான்றிதழ் படிப்புகள் அனைத்தையும் அனைவரும் பயன்பெறும் வகையில் சுருக்கமாக “அனைவருக்கும் கல்வி சாத்தியம்” என தொடர்பணி ஆற்றி வருகின்றது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்

கல்வி சமுதாய கல்லூரி (Kalvi Community College) தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் கீழ் மிகச் சிறந்த, தேவையான, உடனடி வேலைவாய்ப்பு உத்திரவாதம் தருகின்ற பட்டப் படிப்புகளான Beautician, Desktop Publishing (DTP), Computer Hardware Servicing, Animation, Fashion Designing, Garment Making, Early childhood care education, Mobile Phone servicing ஆகிய பாடப்பிரிவுகளில் கல்விச் சேவை” வழங்கி வருகின்றது.

இதன் மூலம் ஏழை எளியோர், ஆதரவற்றோர், நலிவுற்றோர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோர் மிகச் சிறந்த பலன்களை பெறுகின்றனர்.

National Institute of Open Schooling (NIOS)

NIOS என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து “கல்வி”” - 8, 10, 11 மற்றும் 12 வகுப்புகளில் மாணவர்களுக்கு, CBSE பாடத்திட்டத்திற்கு இணையான கல்வி சான்றிதழ்கள் பெற வழிவகை செல்கின்றது. இத்திட்டத்தில் இந்தியாவின் மத்திய அரசின் (CBSE) பாடத்திட்டத்திற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட (Recognized) சான்றிதழ் வழங்கப்படுவதால் இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் B.E., M.B.B.S. போன்ற தேசிய நுழைவுத் தேர்வின் மூலம் தேர்வு நெறிமுறைப்படுத்துதல், போட்டித் தேர்வு, அரசாங்க பணித்தேர்வு என அனைத்து வகையிலும் பயன் பெறலாம்.

மத்திய தேர்வாணயம், தேசிய தேர்வாணயம் போன்றவைகளால் நடத்தப்படுகின்ற அனைத்து வகை தேர்வுகளையும் எழுத கல்வி நிறுவனம் வழிவகை செய்கின்றது. கல்வி இடைநிற்றல்” மாணவர்கள் இத்திட்டத்தில் கீழ் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் பள்ளி பாடப்பிரிவுகள் மட்டுமின்றி தொழில் கல்வியையும் (Vocational) பிரிவுகளையும் இணைந்து படிக்கும் அறிய வாய்ப்பினை இதன் மூலம் பெறலாம். நாம் விரும்பிய பாடத்தை விரும்பிய நேரத்தில் படித்து தேர்ச்சி பெற முழு பொறுப்பேற்று, வேலை வாய்ப்பு மற்றும் தங்களின் தனித்திறமையினை கல்வியோடு சேர்த்து வளர்க்கும் வாய்ப்பினையும் இச்சமுதாயத்திற்கு கல்வி குழுமம் கிடைக்க பெரிதும் உதவுகின்றது.

அடிதட்டு சமுதாய மக்கள் அதிகளவிலும், அதிலும் குறிப்பாக நலிவுற்று, வறுமையால் கல்வியை இளமையில் இழந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கின்றது. அடிப்படை கல்வி பெற்று, அச்சான்றிதழ் மூலம், உயர்கல்வி, தொழில், ஓட்டுநர் உரிமம் ஆகியன பெற இத்தொலைதூரக் கல்வி இயக்கம் ஆவன செய்கிறது.

மேற்கண்ட சாதனையின் தொடர் நிகழ்வாக, “கல்வி”யில் கற்றவர்கள் அரசு ஊக்கத்தொகை என மென்மேலும் பல வழிகளில் பயன்பெற “கல்வி குழுமம்”” உதவிபுரிகின்றது.

 

Tags: News, Madurai News, Lifestyle, Academy, Coaching, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top