வேலம்மாள் மாணவரின் உருக்கமான பேட்டி! தேர்வில் சாதனை!

வேலம்மாள் மாணவரின் உருக்கமான பேட்டி! தேர்வில் சாதனை!

'மாதா, பிதா, குரு, தெய்வம்' என சொல்வார்கள். தன்னுடைய வலியையும் ஒரு துட்சமாக எண்ணி, தன்னுயிர் கொண்டு மற்றொரு உயிரை பிறப்பிக்கும் தாயே எல்லோரிலும் முன்னோடியாய் இருக்கிறாள். இன்று நமக்கு வாழ்வில் மகிழ்வான ஒரு தருணம் ஏற்பட்டாலும், கசப்பான ஒரு தருணம் ஏற்பட்டாலும் முதலில் அதனை பகிர நாம் தாய்மடியையே தேடிகிறோம். அந்தளவிற்கு தாய் எல்லாமானவளாய் இருக்கிறாள்.

தான் பெற்று வளர்க்கும் பிள்ளை வாழ்வில் ஒரு நல்ல இடத்தினை அடைய வேண்டுமென அம்மாவிற்கு ஒரு ஆசை, தன்னுடைய ஆள்மனதில் இருக்கும். அந்த ஆசையை நாம் நிறைவேற்றுவதுதான் நம்மை பெற்று வளர்த்த தாய்க்கு நாம் செய்யும் கைமாறு. தன் தாயின் கனவேயே தன் கனவு என தற்போது அதனை நோக்கி முழு வேகத்தில் செயல்பட களமிறங்கிருக்கிறார் வேலம்மாள் பள்ளி மாணவன் செல்வன். ஸ்ரீஹரி.

நடந்து முடிந்த பணிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1171 மார்க் பெற்றுள்ள ஸ்ரீஹரி. ஒருசில குடும்ப பிரச்சனைகளின் ஊடாக தன்னுடைய வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருந்த போதிலும் தேர்வில் சிறப்பான மதிப்பெண்ணைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனனர். ஸ்ரீஹரியை வாழ்த்துதலோடு சந்தித்துவிட்டு, அவரிடம் சற்று உரையாடினோம்.

பள்ளி பருவத்திலிருந்தே நாம் படிக்கும் படிப்பு பணிரெண்டாம் வகுப்பினை முன்னிலைப்படுத்தியே தான் இருக்கும். சமீபத்தில் ரேங்கிங் முறை இல்லை என்று அறிவித்திருந்தாலும், சகமாணவர்கள் மத்தியில் ஒரு போட்டி இருக்கும். அதுப்போல தான் எனக்கும். என்னுடைய தந்தை தபால்துறையில் பணியாற்றிவருகிறார். எங்களுடைய குடும்பத்தில் யாருமே அரசாங்க வேலையில் உயரிய பணியில் இல்லை. எனவே, என்னை அவ்விடத்தில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டுமென்பது என்னுடைய அப்பா அம்மாவின் கனவு. எனவே என்னுடைய ஆறாம் வகுப்பை வேலம்மாள் பள்ளியில் துவங்கினேன்.

வேலம்மாள் பள்ளி கல்விக்கு நிகரான முக்கியத்துவத்தை Extra Curricular activities-க்கும் அளிக்கும். இதனால் கல்வியோடு என்னால் பல்வேறு கலைகளையும் கூடுதலான கற்றுக்கொள்ள முடிந்தது. ஒவ்வொரு பள்ளியும் தம்முடைய பணிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு அதிகமான முக்கியத்துவம் அளிப்பார்கள். அதேப்போல தான் எங்களின் பள்ளியிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்புகளுக்கு தினமும் காலையில் தேர்வுகள் நடத்தப்படும். இது பொது தேர்வு காலங்களில் ஏற்படும் பதட்டத்தினை போக்கும் ஒரு சிறப்பான பயிற்சியாகவும் அமைந்திருந்தது.

என்னுடைய அப்பா திரு. ராஜன், அம்மா திருமதி. ....... இருவருமே படிப்பின் மீது எனக்கு சரிசமமான அக்கறையை அளித்தனர். என்ன கல்வி சார்ந்து எனக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் உடனே செய்யக்கூடியவர்கள். தற்போது நடைபெற்ற கணக்கு பொது தேர்வின் போது யாரும் எதிர்பார்த்திராத ஒரு தருணத்தில் என்னுடைய தாயார் மறைந்துவிட்டார்.

நாங்கள் உடைந்து போயிருந்தோம். இத்தனை ஆண்டுகள் நான் பார்த்து வாழ்ந்த என்னுடைய தாயாரின் மறைவு எனக்கு தாங்க முடியாத ஒரு துயரத்தை அளித்தது. தேர்விற்கு செல்ல வேண்டாம் என்கிற ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வேளைதான், என்னுடைய தாயார் என்னை பற்றி கொண்டிருந்த கனவு எனக்கு தோன்றியது. இன்றும் எப்படி அந்த தேர்வை நான் எழுதினேன், என்ன கேள்வி கேட்டகபட்டிருந்தது என்று அப்போது தெரியவில்லை. சுயநினைவின்றியே தேர்வினை முடித்தேன். எப்படியும் இந்த தேர்வு அடம்பட்-டாகிவிடும் என்று தான் நினைத்தேன். ஆனால் கணக்கு தேர்வு எனக்கு முழு மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது.

என்னுடைய தாயாருக்கு நான் மருத்துவம் அல்லது அரசாங்க பணிகளில் அமரவேண்டுமென்பதே ஆசை. எனினும் என்னால் தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் சிறப்பாக செய்ய முடியவில்லை. எனவே, IAS, IPS போன்ற சீவில் சர்வீஸ் தேர்வுகள் தான் என்னுடைய இலக்கு. எனவே, என்னுடைய இளங்கலை பட்டப்படிப்பாக B.Sc Agriculture-ஐ தேர்வு செய்து வெற்றிப் பயணம் பயணிக்க போகிறேன்'. என கூறினார்.

வாழ்க்கை நமக்கு ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பாடத்தினை நமக்கு கற்பிக்கும். அதை உள்வாங்கி நாம் தேர்வு செய்யும் பாதையில் வாழ்க்கையின் பயணம் தீர்மானிக்கப்படும். தற்போது இவர் எடுத்திருக்கும் இப்பாதையானது என்று வெற்றியுள்ளதாகவும் அமைய இவரை வாழ்த்தலாம் 9443631440 என்கிற எண்ணில்.

Tags: News, Lifestyle, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top