சாதனை சிகரம் தொட்டு வரும் GMS.MAVMM கல்லூரி மாணவர்கள்!

சாதனை சிகரம் தொட்டு வரும் GMS.MAVMM கல்லூரி மாணவர்கள்!

கல்லூரி படிப்பு என்பது பல்வேறு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது. மாணவர் படிக்கின்ற கல்லூரியில் சிறந்த கட்டமைப்பும், நல்ல அனுபவமுள்ள, மிகச் சிறந்த யோக்கியதாம்சங்களை பெற்றுள்ள ஆசிரியர்களும் இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கான கல்வியானது நல்ல முறையில் கொடுக்கப்பட இயலும். அத்துடன் கல்லூரி படிப்பு என்பது ஒவ்வொரு மாணக்கரின் வாழ்விலும் ஒரு முக்கியமான காலகட்டமாகும். இதனில் அவர்கள் கல்வியுடன் நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளார்கள். கல்வி வணிகமாகி வரும் இந்த நாட்களில், GMS.MAVMM பாலிடெக்னிக் கல்லூரியானது மேலே சொல்லப்பட்ட நல்ல விஷயங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு மிகச் சிறந்த அப்பழுக்கற்ற கல்வியை அளித்து வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

மதுரை ஆயிரவைசிய மஞ்சப்புத்தூர் சமூகத்தைச் சார்ந்த சிந்தனையாளர்கள், சான்றோர்கள் சிந்தையில் ஏழை, எளிய கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு தொழிற்கல்வியை வழங்கிட வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது. அதனை செயல்படுத்தும் வகையில் 1985-ஆம் ஆண்டு அழகர்மலை அடிவாரத்தில் தோற்றுவிக்கப்பட்டது. ஜி.எம்.எஸ். - எம்.ஏ.வி.எம்.எம்.பாலிடெக்னிக் கல்லூரி. பழம் பெருமையும் சிறப்பும் வாய்ந்த முதன்மை பெற்ற இக்கல்லூரி தொடர்ந்து பல ஆண்டுகளாக கல்வியில் முதலிடத்தை தக்க வைத்துள்ளதோடு மாணவச் செல்வங்கள் சிகரம்தொட உயரும் வகையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திட காரணமாய் இருந்துள்ளது. மாணவர்களை மாநில மற்றும் மாவட்ட அளவில் முதன்மை நிலை பெற்றிட நம் கல்லூரி கடைபிடிக்கும். சில வழிமுறைகள்:

அனுபவமிக்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யும் முன்னர் ஆசிரியர்களின் தகுதி, திறமை 10-ம் வகுப்பிலிருந்து முதுநிலைவரை தொடர்ந்து அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கல்வியறிவு, Verbal expression, அனுபவம் ஆகியவற்றை கவனத்துடன் கருத்திற்கொண்டு தேர்வு செய்கின்றனர்.

மாணவ ஆசிரியர்கள் நேர்முகக்காணலில் அவர்களின் level of IQ சோதிக்கப்பட்டு அவரவர் தரத்திற்கேற்றார்போல் பாடத்திட்டங்கள் ஒதுக்கப்பட்டு, ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். திறன்மிகு ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள தலை சிறந்த முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்கள் மூலமாக அதிக அளவில் பணி நியமனம் பெற்றுத்தந்து தொடர் சாதனை நடந்து வருகிறது.

சிறப்பு பயிற்சிக்கு தேவையான Teaching aids, Training models, charts, teaching bulletin, period calls அனைத்தும் வழங்கப்பட்டு முதலிடம் பெற்றிடத்தயார் செய்யப்படுகின்றனர். சென்னை தொழில்நுட்ப இயக்கத்தின் வல்லுனர்கள் மூலம் வலைத்தளங்களில் நடத்தப்படும் A VIEW COURSE மாணவர்களை முதன்மை பெற்றிட உதவுகின்றது. அறிவாற்றல் மற்றும் தொழிற்கல்வியில் விருதுகள் பெற்ற அறிஞர்கள், முனைவர்கள் மூலம் தொழில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு மாநில அளவில் நல்லதொரு நிலையினை அடைய பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பாடங்களில் முனைவர் திரு B. சரவணன், M.E., அவர்கள் சிறப்பு வகுப்புகள் எடுப்பதன் மூலம் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற முடிகிறது. பொறியியல் கல்லூரிகளில் நடைபெறும் Teaching Exhibition மற்றும் Paper Presentationல் மாணவர்கள் பங்கு பெறச் செய்து முதலிடம் பெற வழிநடத்தப்படுகின்றனர்.

கல்லூரிகளின் தலைவர் திரு.N.பாஸ்கரன் (VKP) அவர்களின் வழி காட்டுதல், தாளாளர் / செயலாளர் திரு.N.சூரியமூர்த்தி அவர்களின் இடைவிடா முயற்சி முதல்வர் திரு.B. சரவணன், M.E., அவர்களின் கடுமையான உழைப்பு அனுபவமிக்க துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆர்வம், மாணவர்களின் ஆற்றலை தூண்ட மாவட்ட அளவில் உயரிய நிலையினை அடைந்திட நமது GMS-MAVMM பாலிடெக்னிக் கல்லூரி சிறந்த வழியினை காட்டுகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

தொடர்புக்கு 0452-2325052

Tags: News, Lifestyle, Coaching, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top