தானியங்கி ரேசன் விநியோக இயந்திரம் புராஜெக்ட் செய்து ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலை இ சி இ மாணவர்கள் சாதனை!

தானியங்கி ரேசன் விநியோக இயந்திரம் புராஜெக்ட் செய்து ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலை இ சி இ மாணவர்கள் சாதனை!

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் இறுதியாண்டு ECE படிக்கும் மாணவர்கள் ஆர். ஆர்த்தி, பி. டேனியல், டி. பாலாஜி. இவர்கள் இ சி இ பேராசிரியர்கள் முனைவர் எம். பள்ளிகொண்ட ராஜசேகரன், துறைத்தலைவர் முனைவர் பி. சிவக்குமார் ஆகியோர் ஆலோசனைப்படி ரேசன் கடையில் ஸ்மார்ட் அமைப்பு பொருள்கள் விநியோகத்திற்காக புதிய தானியங்கி மின்னணு இயந்திரம் ஒன்றை புராஜக்ட் செய்து சாதனை படைத்துள்ளனர்.

தற்பொழுது அரசு சார்பில், ரேசன் கடைகள் மூலமாக கோதுமை, அரிசி, மண்ணெண்ணைய், சர்க்கரை போன்ற பொருட்கள் ரேசன் கார்டுகளில் பதிவு செய்யப்பட்டு எடை பார்த்து ரசீதுபோட்டு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

இந்த ஒட்டு மொத்த மனிதர்களுடைய கைப்பழக்க நடைமுறையில், பல பிரச்சினைகள் குறிப்பாக பொருள்கள் இருக்கும் நிலை எடை அளவில் குறைபாடு, போன்ற பல நடைபெற்றுவருகின்றன. இதனால் பலருக்கு குறிப்பிட்ட தேவையான பொருள் கிடைக்காமல் அவதிப்படும் நிலை. இதனை மொத்தமாக சரிசெய்வதற்க்குத்தான் “தானியங்கி ரேசன் விநியோகம் இயந்திரம்”.

இந்த இயந்திரத்தில் கணிணி, அதற்கான புதிய “ லேப் வியூ” மென்பொருள் வடிவமைப்புடன் உள்ளது. மேலும், கடினபொருள், உனோபோர்டு, சென்சார், டி சி மோட்டார், எல் 293 டி மோட்டார் டிரைவர், பம்பு, கீபேட், பேட்டரி 12 ஓல்ட், ரிலே போர்டு, வயர்கள் போன்ற பல்வேறு பொருள்கள் அடங்கிய பெட்டி, ஒரு டேங்க் உள்ளன. இந்த மின்னணு இயந்திரத்தில், முதலில் ரேசன் கார்டை நுழைத்தவுடன், அதை “ஸ்கேன்” செய்யும். பின்பு அந்த கார்டுக்கு உள்ள பொருள், அளவு முதலியவற்றை தேர்வு செய்து, பில்போடும் இயந்திரத்திற்கு அனுப்ப பில் போடப்படும். இந்த பில்லிலேயே அந்த பொருள் கடையில் உள்ள “ஸ்டாக்”, இதுபோக மீதி ஸ்டாக் அளவு வந்துகொண்டே இருக்கும். அதே சமயம் அந்தக் கணிணியில் தொடுதிரையில் அரிசி, எண்ணெய் போன்றவற்றிற்கு நேரே கிளிக் செய்தால் ஸ்டாக் தெரிந்துகொள்ளலாம்.

இதனை இணையதளத்திலும், மக்கள், ஸ்டாக் விபரம் தெரிந்து கொள்ளலாம் எடையும் துல்லியமாக டேங்கிலிருந்து கீழே, மின்னணுவின் கணக்கின்படி எடுத்துக்கொள்ளலாம் கிரஸின் அரிசி என திரவ திடப் பொருள்களுக்கு தனித்தனியே டேங்க்கள் உள்ளன. ஏற்கெனவே கார்டுக்க ஒரு பொருள் விநியோகம் செய்திருந்தாலும் அதனை ஸ்கேனில் பார்த்து விநியோகம் செய்வது மறுக்கப்படுகிறது என்றார் மாணவி ஆர்த்தி.

மேலும், பாரதப்பிரதமருடன் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி இயங்க இருக்கும் “ஸ்மார் சிட்டி” உருவாக்கத்திற்காகவே இதனை மாணவர்கள் செய்ய ஊக்கம் கொடுத்து வழி நடத்தியதாக கூறினார், பல்கலை தேர்வு கட்டுப்பாடு அதிகாரி முனைவர் பள்ளிகொண்டராஜசேகரன் இந்த புதிய சுமார்ட் முறைப்படி யாவரும் வரிசையில் நிற்க தேவையில்லை, மிகவும் குறைந்தபட்சமாக 5 முதல் 10 நிமிடம் ஒரு ஆளுக்கு முழு வேலையும் செய்து பொருளையும் இரசீதையும் தந்துவிடும். இந்த இயந்திரத்தை செய்ய ரூ. 15,000 ஆனதாகவும், இந்த இயந்திரத்தை செய்வதற்கு 6 மாதகாலம் ஆனதாகவும் கூறினார் மாணவர் டேனியல்.

மேலும், இதனை சென்னை காப்புரிமை கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறிய மாணவர் பாலாஜி, இந்த புராஜக்ட் ஆந்திராவில் அடுத்த மாதம் நடைபெறும் புராஜக்ட் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஹைதாராபாத்தில் இதனை ஒரு ரேசன் கடையில் பொறுத்தி டெமோ செய்வதற்காக மாணவர்குழு செல்கிறது என்று கூறினார். மாணவர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் நிரூபர்கள் முன்பு முழு இயந்திர வேலைகளை செய்து அரிசி, மண்ணெண்ணைய், சர்க்கரை பொருட்களை விநியோகம் செய்து காண்பித்தனர்.

புதிய புராஜக்ட் செய்து காண்பித்த மாணவர்களை பல்கலை வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன், இயக்குநர் முனைவர் எஸ். சசிஆனந்த், துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர், பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன், ஆர் என் டி இயக்குநர் முனைவர் ஆறுமுகம் ஆகியோர் பாராட்டினர்.

Tags: News, Madurai News, Art and Culture, Academy

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top