ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு ANTHE 2017!

ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு ANTHE 2017!

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டெட், மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் ஆக விரும்புகின்ற துடிப்பான ஆர்வமிக்க மாணவர்களின் அபிலாட்சைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி, திறமையை வெளிப்படுத்தி வெற்றியடையச் செய்கின்றது. ஆகாஷ் நேஷனல் டேலண்ட் ஹண்ட் எக்சாம் எனப்படுகின்ற ANTHE 2017 என்ற தேர்வை நடத்தி அதன் மூலம் மாணவர்களை மிகுந்த தகுதியுடையவர்களாக மாற்றுகிறது.

இந்த சிறப்பான ஸ்காலர்ஷிப் தேர்வானது 8, 9, மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றது. வருகின்ற அக்டோபர் 29-ம் தேதி 2017-ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை நாட்டின் 22 மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படவிருக்கும் இந்த தேர்வானது 8-வது ஆண்டாக வெற்றியுடன் நடத்தப்படுகின்றது. இந்த தேர்வில் பங்கு பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதியானது அக்டோபர் 22, 2017 ஆகும். இதற்கான மிகக்குறைந்த தேர்வு கட்டணமாக ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ANTHE கட்டணத்தை இந்த ஆண்டிற்கான மாணவர்கள் டிஜிட்டல் முறையிலும் பேடிஎம் முதலானவற்றின் மூலமாகவும் செலுத்திக் கொள்ளலாம்.

மேற்காண் தேர்வில் கேட்கப்படுகின்ற 90 மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகளுக்கு மொத்தம் வழங்கப்படும் மதிப்பெண்கள் 360 ஆகும். இந்த கேள்விகள் மாணவர்களின் இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம் மற்றும் உளரீதியான திறமைகளை சோதிப்பது தொடர்பானதாக இருக்கும். 8-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களிடையே சிறப்பான 50 முன்னணி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு டியூசன் கட்டணம், சேர்க்கை கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் ஆகியவற்றிற்கு நூறு சதம் ஸ்காலர்ஷிப் அளிக்கப்படுகின்றது. அதேபோல் முதல் 150 முன்னணி மாணவர்கள் கேஷ் அவார்ட் எனப்படுகின்ற ரொக்க சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள். 10-ம் வகுப்பில் படிக்கின்ற  500 முன்னணி மாணவர்கள் (மருத்துவ படிப்பு படிக்க விரும்புபவர்கள்) மற்றும் 1000 பத்தாம் வகுப்பு முன்னணி மாணவர்களுக்கும் (பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள்) 100 சதம் ஸ்காலர்ஷிப் டியூசன் கட்டணத்திற்காக வழங்கப்படுகின்றது. மேலும் பத்தாம் வகுப்பில் படிக்கும் 150 முன்னணி மாணவர்களுக்கு (மருத்துவ மற்றும் பொறியியல் விருப்பம) ரொக்கச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. டாப் ரேங்க் தகுதிக்கு கீழ்பட்ட மாணவர்களும் கம்பெனி கோர்ஸ் பிராஸ்பக்ட்டஸில் குறிக்கப்பட்டுள்ளவாறு ஸ்காலர்ஷிப்களைப் பெற்றிட தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.

மேலே சொல்லப்பட்ட தகுதி திறனுக்கான தேர்வானது இந்தியாவின் முக்கிய மாநிலங்களான அசாம், ஆந்திரபிரதேசம், பீகார், சட்டிஸ்கார், டெல்லி, கோவா, குஜராத், ஹரியானா, ஜம்மு, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேஷ், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தர் பிரதேஷ், உத்திரகாண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் நடத்தப்படுகின்றன. குறைந்தபட்ச நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மாணவர்களிடமிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் கூடுதல் தேர்வு மையங்கள் ANTHE தேர்விற்காக ஏற்பாடு செய்யப்படும் என ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

மிகச்சிறந்த மாணவர்களின் மிக உயர்ந்த குறிக்கோள்களை அடையும் விதமாக லட்சக்கணக்கான மாணவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதில் ANTHE தேர்வானது கடந்த எட்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பேருதவியாக இருந்து அவர்களுக்கான சிறப்பான பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி இந்தியாவின் மிகச்சிறந்த மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் உருவாக்குகின்றது. மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மிகச்சிறந்த கல்வி மேடையை ஏற்பாடு செய்து வெற்றிப் பாதையில் நடந்திட ANTHE தேர்வானது மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வு எழுதும் மூன்றரை லட்சம் மாணவர்களில் ANTHE தேர்வானது நூறு சதம் ஸ்காலர்ஷிப்பையும் கேஷ் அவார்டையும் ஏற்படுத்தி தரும் ஒரு உன்னதமான கல்வி நிறுவனமாக திகழ்ந்து வருகின்றது. பெருமைக்குரிய பல வெற்றி முயற்சிகளோடு தற்போது ஆகாஷ் பெருமையுடன் தம்மை திரு.அமிதாபச்சன் அவர்களின் அமைப்பான கௌன் பெனேகா குரோர்பதி (KBC)-யுடன் இணைத்துக் கொண்டுள்ளதே ஆகாஷ் மக்கள் மத்தியில் பெற்றுள்ள அடையாளத்துக்கான அறிகுறியாகும். கேபிசி இப்போது ஆகாஷுடன் அறிவு பங்குதாரராக இயங்கி வருவது பெருமைக்குரியதாகும்.

மதுரை ஆகாஷ்-ன் பெரு நிறுவனக்கிளையை தொடர்பு கொள்ள: Aakash Institute, 69, KVS Tower, PT Rajan Main Road, Opp to Kendriya Vidyalaya Schoo, Chokkikulam, Madurai. 7550006830, 7550006820, 7550006520, 7550006540. www.aakash.ac.in

Tags: News, Academy, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top