ஐஸ்கிரீமும் ஆரோக்கியமே!

ஐஸ்கிரீமும் ஆரோக்கியமே!

மழையென்றாலும் குளிரென்றாலும் கொளுத்தும் கோடையென்றாலும் ஐஸ்கிரீம் என்பதை நிச்சயம் நாம் ஒதுக்கிடமுடியாது. இன்றும் நம் வீட்டு குட்டீஸ்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தால் அதில் ஒரு ஸ்பூனாவது நமக்கு சொந்தம். எனினும், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என ஒரு சில பெற்றோர் அதிக கட்டுப்பாடு காட்டுவதும் உண்டு. தரம் எங்கு குறைகிறதோ அங்கு பிரச்சனை எழுகிறது. தரமான ஐஸ்கிரீம்கள் என்றும் பாதிப்புகளை ஏற்படுத்தாது. இன்று உலகம் முழுவதும் உடல்நலம் குறித்து உள்ள விழிப்புணர்வினால் மக்கள் தாங்கள் உண்ணும் உணவை அதிக கவனத்துடன் ஆரோக்கியமானதா என்கிற ஆராய்ச்சிக்குப்பின் தான் எடுத்துக் கொள்கிறார்கள். இன்று விலை அதிகமானாலும் வேதியியல் அற்ற உணவு பதார்த்தங்களையே நாடுகிறார்கள்.

இன்று நாம் அதிகம் விரும்பும் ஐஸ்கிரீமிலும் அது சாத்தியமாகியுள்ளது. ஆம்! நேச்சுரல் ஐஸ்கிரீம்ஸ் தான் அது. மதுரையில் மிக சமீபத்தில் கே.கே.நகர் லேக்வியூ ரோடு மற்றும் பை-பாஸ் ரோட்டில் துவங்கப்பட்ட ஸ்கூஃபி ஐஸ்கிரீம் நிறுவனம் தான் இத்தகைய முயற்சியை கையில் எடுத்துள்ளது. இவர்களின் இந்த முயற்சி பற்றியும், நேச்சுரல் ஐஸ்கிரீம்கள் பற்றியும் அறிந்துகொள்ள அங்கேயே விரைந்தோம்.

‘ப்ளேவர்களையும் ப்ரிசர் வேட்டிவ்ஸ்களையும் கொண்டு தயார் செய்யாமல், பழங்களையே ப்ளேவர்களாக மாற்றி முழுக்க முழுக்க நேச்சுரல் ஐஸ்கிரீமாகவே தயார் செய்து விற்பனை செய்கிறோம். பொதுவாக -18 டிகிரிக்கு கீழ் சேமித்து வைக்கப்படும் சாதாரண ஐஸ்கிரீம்கள் ஆறு மாதங்கள் கெடாமல் இருக்கும், ஆனால் எங்களின் ஐஸ்கிரீம் அதே -18 டிகிரியின் கீழ் சேமித்து வைக்கும்போது 15 நாட்களுக்குப்பின் கெட்டு விடும்.’ என்கிறார் ஸ்கூஃபி ஐஸ்கிரீம்ஸின் உரிமையாளர் திரு. பிரபாகரன் வேணு கோபால் அவர்கள்.

‘நீண்ட நாட்களாகவே, பால் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்யவேண்டுமென்பது என் ஆசை. எனவே, ஒரு முயற்சியாக கே.கே.நகர் லேக்வியூ ரோட்டிலும், சமீபத்தில் பை-பாஸ் ரோட்டிலும் எங்களின் கிளைகளைத் அப்ரஜித் புஃட்ஸின் ஒரு அங்கமாக துவங்கினோம். துவக்கத்தில் சாதாரண ப்ளேவர்ஸ்களை மையப்படுத்தியும், ஐந்து நேச்சுரல் ஐஸ்கிரீம்களையும் இணையாக கொண்டிருந்தோம். ஆனால் எங்களிடம் வந்த வாடிக்கையாளர்களின் விருப்பம் நேச்சுரல் ஐஸ்கிரீமிலேயே அதிகம் இருந்தது. எனவே, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப முழுக்க முழுக்க நேச்சுரல் ஐஸ்கிரீம் ஷாப்பாக மாற்றினோம்.

நேச்சுரல் ஐஸ்கிரீமை பொருத்தவரை முழுக்க முழுக்க காலத்தை சார்ந்தே தயார் செய்யமுடியும். மழைக்காலங்களில் லிச்சி மற்றும் மாம்பழங்கள் கிடைக்காது. எனவே, அப்போது அந்த ஐஸ்கிரீம்களை தயார் செய்வதில் சிரமமிருக்கும். இந்த ஐஸ்கிரீம்கள் முழுக்க முழுக்க நேச்சுரல் என்பதால், பழங்களில் கிடைக்கும் போஷாக்கும், பாலில் கிடைக்கும் போஷாக்கும் ஒருசேர இந்த ஐஸ்கிரீமில் கிடைக்கும்.

இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து ஐஸ்கிரீம்களும் எந்த ஒரு வேதியியல் பொருட்களும், பிரிசர் வேட்டிவ்ஸ்-ம் சேர்க்கப்படாமல் முழுக்க முழுக்க பழங்களை மசித்து தயார் செய்யப்படுகிறது. ஐஸ்கிரீம்களில் மாம்பழம், க்ரேப்ஸ், சப்போட்டா, சீதாப்பழம், அத்திப்பழம், வறுத்த ஆல்மன்ட், வாழைப்பழம், ஸ்ட்ராபெரி, காஃரி வால்நட், பப்பாளி, அன்னாச்சிப்பழம், பலாப்பழம், க்ரீன் ஆப்பிள், தர்பூசணி, இளநீர் போன்ற வகைகளில் ஐஸ்கிரீம்ஸ் விற்பனை செய்கிறோம்.

ஐஸ்கிரீம் போல மற்றொன்று எல்லோராலும் விரும்பப்படுவது குல்ஃபி. மதுரையிலேயே முதன் முறையாக வட்டமான குல்ஃபியை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். பெரும்பாலும் குல்ஃபியில் பிஸ்தா, மலாய் அல்லது சாக்லேட் ப்ளேவர்களே எல்லோரும் சாப்பிட்டிருப்பார்கள். இங்கு நேச்சுரல் குல்ஃபியாக உளர் அத்திப்பழம், இளநீர், ஷாஹி குலாப், வறுத்த பாதாம், சப்போட்டா, ப்ளாக்கரண்ட், ராஸ்பெரி போன்ற ப்ளேவர்களில் தயார் செய்துள்ளோம். இந்த குல்ஃபியில் வெற்றிலை மற்றும் நாவல்பழம் எங்களின் தனிச்சிறப்பு.

இனிவரும் காலங்களில் பல்வேறு மாவட்டங்களிலும் புதிய கிளைகளை பிராண்சைஸ் முறையில் கொண்டு செல்லவிருக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.’ என கூறினார். நிச்சயம் இந்த ஸ்கூஃபி, ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு ஒரு ஸ்பெஷலான ட்ரீட்டாக அமையும்.

தொடர்புக்கு: 9894411110

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top