இயற்கை உணவில் “ஆர்கானிக் மார்டின்” அரிய சேவைகள்!

இயற்கை உணவில் “ஆர்கானிக் மார்டின்” அரிய சேவைகள்!

மக்களின் உடல்நலத்தையும் தொடர் தேவைகளையும் கருத்தில்கொண்டு இப்பொழுதெல்லாம் ஒரு சில அமைப்புகள் சுத்தமான தோட்ட காய்கறிகளை, அதாவது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறிகளை நுகர்வோருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் உருவாக்கப்பட்டு சேவைகளை புரிந்து வருகின்றனர்.

இயற்கை காய்கறிகள் உடலுக்கு நல்லது என்னும் கருத்துக்கு மாற்றுகருத்து இருந்திட வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக செயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகள் உற்பத்தி செய்வதில்லை, பயிர்செய்யப்படும் அனைத்து காய்கறிகளுமே உடலுக்கு தீங்கு இழைக்காத வகையில் இயற்கை காய்கறிகளாகவே இருந்தன.

காலம் செல்ல செல்ல, காய்கறி உற்பத்தியானது வணிகப்படுத்தப்பட்ட பின்பு, செயற்கை உரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு காய்கறிகளால் மனித உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் உருவாகின. மதுரையில் உடல்நலத்திற்கு அக்கறை கொண்டுள்ள தமது வாடிக்கையாளர்களுக்கு இயற்கை முறையில் பச்சை காய்கறிகளை கொண்டு சேர்க்கும் நல்ல எண்ணத்தில் ஆர்கானிக் மார்ட் என்னும் அமைப்பினை உருவாக்கி நடத்தி வருகின்றார்கள். இவர்களின் செயல்பாடுகள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள மதுரை பைபாஸ் ரோட்டில் இபாகோவிற்கு அருகில் இயங்கிவரும் ஆர்கானிக்மார்ட்டின் நிர்வாகி திரு.விக்னேஷ்குமார்e அவர்களை சந்தித்து உரையாடினோம்.

உண்மையை சொல்லப்போனால் முதலில் ஒரு விளம்பர கம்பெனியை ஆரம்பித்து அதன்மூலமாக சில ஐடி பிராடக்ட்ஸ் உருவாக்கலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் எங்களுக்குள் ஊறிப்போயிருந்த ஆர்கானிக் புட்ஸ் என்ற கான்செப்ட் மறையவேயில்லை. அதனால் தானோ என்னவோ ஆரம்பத்தில் இருந்த எண்ணத்தை மாற்றி ஆர்கானிக்மார்ட் என்ற அமைப்பினை ஏற்படுத்தியிருக்கின்றோம். இதன் மூலமாக கையாளும் இடைத்தரகர்கள் யாருமின்றி காய்கறிகளின் விலைக்கு மேலான லாபங்கள் ஏதுமின்றி தோட்டத்தில் இருந்து சுத்தமான இயற்கை காய்கறிகள் உபயோகிப்பாளர்களுக்கு நேரடியாக கிடைக்கச்செய்து வருகின்றோம். நாங்கள் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு மிக குறைந்த காலஅவகாசங்களில் இயற்கை காய்கறி ளை எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வினியோகித்து வருகின்றோம். உண்மையில் இந்த இயற்கை காய்கறிகள், காய்கறிகளே அல்ல, அவையாவும் எங்களுடைய நுகர்வோருக்கான “உடல் நலம்” என்றே சொல்லலாம்.

எங்களால் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ள “ஆர்கானிக்மார்ட் பார்ம்பாக்ஸ்” எனப்படுகின்ற பெட்டி ஒன்றினையும் தயாரித்திருக்கின்றோம். இதன் மூலமாக இயற்கை காய்கறிகளை நேரடியாக உறுப்பினர்களின் இல்லங்களுக்கே டெலிவரி செய்கின்றோம். இதற்கென மூன்று முக்கிய கோட்பாடுகளை கீழ்கண்டவாறு உருவாக்கியிருக்கின்றோம்.

1. வாங்கும் உறுப்பினர்களின் ஒவ்வொரு சாப்பாட்டிற்கும் தேவையான இயற்கை காய்கறிகளை எப்போதும் தயார்நிலையில் வைத்திருத்தல்.

2. குடும்பத்திலிலுள்ள எல்லா வயதினருக்கும் ஏற்றவாறு பலதரப்பட்ட காய்கறி களை தயார் செய்து வைத்திருத்தல்.

3. ஒவ்வொரு வாரத்திற்கும் வீட்டிலுள்ள சமையல் வேலையில் ஈடுபடுவோருக்கு  விதவிதமான சமையலை செய்திடத் தேவையான இயற்கை காய்கறிகளை தொடர்ந்து கொடுத்து வருதல்.

எங்களுடைய விசேஷமான வெகி பார்ம்பாக்ஸ் அண்ட் புருட் பார்ம்பாக்ஸ் ஆகியவை உபயோகிப்பாளர்களுக்கு நல்ல பசுமையான காய்கறிகளையும் புத்தம் புதிய பழ வகைகளையும் டெலிவரி கொடுக்கப்பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பெட்டியிலும் 14 விதமான வழமையான காய்கறிகள் இடம் பெறுகின்றன. அதேபோல் பழப்பெட்டியில் 7 விதமான சீசனல் பழங்கள் இடம் பெறுகின்றன.

எங்களுடைய பார்ம் பாக்ஸ் பெட்டிகள் மூன்று வித, அதாவது சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில் உள்ளன. அவற்றில் உறுப்பினர்கள் தேவைக்கு தகுந்தபடி தேர்வுசெய்து கொள்ளலாம். இயற்கை காய்கறிகளும் பழங்களும் தொலைபேசி அழைப்பை தொடர்ந்து வீடுகளுக்கு நேரடியாக டெலிவரி கொடுக்கப்பட்டு வருகின்றது. மிக விரைவில் எங்களின் ஆர்கானிக்மார்ட்டின் மூலமாக குடும்பங்களுக்கு தேவையான பலசரக்கு சாமான்களையும் நேரடியாக டெலிவரி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top