ஆரோக்கியத்திற்கு அவசியமான இராணுவ உணவு முறை!

ஆரோக்கியத்திற்கு அவசியமான இராணுவ உணவு முறை!

உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ராணுவ ரீதியான ஒரு உணவு முறையை அமெரிக்க ராணுவம் பரிந்துரை செய்துள்ளது. இதை கடைப்பிடிப்பதற்கு, சாதாரண இந்திய உணவுகளை இத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

இந்த ஏழு நாள் உணவுமுறை திட்டத்தை பற்றி கருத்துக் கூறும் போது உணவியல் நிபுணர்கள் இது சாத்தியமே, இது கடிமானதல்ல மற்றும் இது ஒன்றும் முடியாத காரியமும் அல்ல என்ற வகையில் தெரிவித்திருக்கின்றார்கள். ராணுவ உணவு முறை என்பது இப்போது உலகம் முழுவதும் பாராட்டப்படும் ஒன்றாக இருந்து வருகின்றது. இது கடைப்பிடிக்கப்படும்போது ஒருவரின் எடைப்பிரச்சினைகளுக்கு விடை அளிப்பதோடு மிக எளிதாக எடையை குறைப்பதற்கும் வழிவகை செய்கின்றது.

ராணுவ உணவு முறை என்பது என்ன?

ராணுவ உணவு முறை என்பது ஒருவிதமான விரதத்தின் சாயல் கொண்ட, எடைக்குறைப்பு அடிப்படையிலான மிகக்குறைந்த இந்திய கலோரி திட்டம் கொண்ட உணவாகும். இந்த உணவானது முதல் மூன்று நாள் திட்டத்தை மிகக் குறைந்த கலோரிகளுடன் பரிந்துரைக்கின்றது. அடுத்த நான்கு நாட்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் உணவை எடுத்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகின்றது. முக்கியமாக இந்த ராணுவ உணவு முறை அமெரிக்க ராணுவத்தில் உள்ள ராணுவ வீரர்களின் உடலை மிகப்பொறுத்தமான நிலையில் சிக்கென்று வைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இருந்த போதிலும் இந்த ராணுவ உணவு முறையானது எந்த ஒரு ராணுவ அமைப்புடனோ அல்லது அரசு சார்ந்த நிறுவனத்திடனோ இணைக்கப்படாததாக இருக்கின்றது.

ராணுவ உணவு முறை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றது?

இந்த ராணுவ உணவு முறை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, முதலாவது மூன்று நாட்களை கொண்டதாகவும், அடுத்த பகுதி நான்கு நாட்களை கொண்டதாகவும் உள்ளது. முதல் மூன்று நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுகளுக்கு உட்பட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு சொல்லப்பட்டுள்ளன. ஒரு வேளை உணவிற்கும் மற்றொரு வேளை உணவிற்கும் இடையிலான காலத்தில் நொறுக்குத்தீனி எதுவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. மீதமுள்ள நான்கு நாட்களுக்கும் அதாவது இரண்டாவது பகுதியில் நீங்கள் சத்தான உணவை குறைவான கலோரியில் தொடர்ந்து எடுத்துக் கொள்வதற்கு ஊக்கப்படுத்தப்படுகின்றீர்கள். சுருக்கமாக சொல்லப்போனால் முதல் பகுதியான மூன்று நாட்களில் ஒரு சில கட்டுபாடுகளுடன் கூடிய ஒரு குறிப்பிட்ட உணவையே உட்கொள்ளுதல் வேண்டும்.

மீதமுள்ள நான்கு நாட்களில், அதாவது இரண்டாம் பகுதியில் நான்கு நாட்களுக்கு குறைந்த அளவு கட்டுபாடுள்ள உணவை உட்கொள்ளலாம். இந்த கால கட்டத்தில் உட்கொள்ளப்படும் உணவின் கலோரியானது ஒரு நாளைக்கு 1500 முதல் 1800 வரை இருக்கலாம். இந்த வகையில் உங்களுக்கு அன்றாட தேவையை ஒத்துப்போகும் அளவில் கலோரியின் தேவையை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

இரண்டாவது பகுதியில் சத்துள்ள உணவுகளையும் உணவு தொகுப்பு கட்டுபாடு இல்லாமலும் சாப்பிடலாம். மொத்த கலோரிகள் இரண்டாவது பகுதியில் ஒரு நாளைக்கு 1800 முதல் 2000 கலோரிகள் வரை இருக்கலாம். 

பரிந்துரைக்கப்பட்ட ராணுவ உணவு முறைகள்

காலை உணவு

1. வறுக்கப்பட்ட ஒரு ரொட்டி துண்டு அல்லது ஒரு புரோட்டா

2. மூன்று முட்டைகளால் போட்டு எடுக்கப்பட்ட ஒரு ஆம்லேட் அல்லது சமைக்கப்பட்ட ஓட்ஸ்

3. ஒரு கப் காப்பி அல்லது தேனீர் அல்லது பால் அல்லது புரோட்டீன் சத்துள்ள ஷேக்

மதிய உணவு

1. வறுக்கப்பட்ட ஒரு ரொட்டி துண்டு அல்லது இரண்டு ரொட்டிகள்

2. குவளை நிறைந்த காய்கறிக் கூட்டு

3. ஒரு குவளை நிறைந்த பருப்பும் சாதமும் அல்லது சாதமும் கோழிக்கறியும்

இரவு உணவு

1. 200 கிராம் கிரில்ட் சிக்கன் அல்லது 200 கிராம் கிரில்ட் மீன் அல்லது குவளை நிறைந்த பருப்பும் சாதமும்

2. காய்கறி சலாட்

3. இரண்டு வாழைப் பழங்கள்

இவ்விதமான, ராணுவ முறையிலான உணவு உங்கள் எடையை வெகுவாக குறைத்து உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகின்றது. இதைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, சில உணவியல் நிபுணர்கள் இதனை இடைவெளி விட்ட விரதம் என்று குறிப்பிடுகின்றார்கள். இந்த ராணுவ முறையிலான உணவு புரதச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் அதிகம் கொண்டதாகவும் இருப்பதால் உங்களின் உடல் வளர்ச்சிக்கு அதிகப்படியாக உதவுகின்றது. நல்ல ஆரோக்கியமாக உள்ள மனிதர்களுக்கு ராணுவ உணவு முறை எந்த கெடுதலும் ஏற்படுத்தாமல் எடையை குறைப்பதற்கும் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதற்கும் உதவுகின்றது. ஆனாலும் கூடுதல் தினங்களுக்கு இந்த திட்டத்தை விரிவுப்படுத்துவது நல்லதல்ல.

ஆகவே உங்கள் உடலை நன்றாக வைத்துக் கொள்வதற்கும், உங்களின் அன்றாட பணிகளை ஆர்வத்துடனும் முழு ஈடுபாட்டுனும் செய்து முடிப்பதற்கும் ஒரு முறை நீங்களும் ராணுவ உணவு முறையை ஏன் முயற்சி செய்து பார்க்கக் கூடாது?

இது மாதிரியான ஆரோக்கியத்தின் அடிப்படையில் அட்வென்சரின் ஒவ்வொரு இதழிலும் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும் சில முக்கியமான உணவுக் கட்டுப்பாட்டு முறைகளை தொடர்ந்து எங்கள் அட்வென்சர் வாசகர்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு பிரசுரித்து வர ஆரம்பித்துள்ளோம்.

Tags: News, Beauty, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top