நன்மைகள் தரும் செக்கு எண்ணெய்!

நன்மைகள் தரும் செக்கு எண்ணெய்!

எங்கும் இல்லாத சில விஷயங்கள் மதுரைக்கு மட்டுமே உண்டு. கடலில் கலக்காத வைகை, மனதை மயக்கும் மல்லிகைப்பூக்கள், இதே மல்லிகை போன்ற இட்லியும், கொத்துமல்லி சட்னியும்...

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இது போல் மதுரையில் ஒரு விஷயம் நீண்ட நாட்களாக இருந்தது. அதுதான் கமகமக்கும் நல்லெண்ணெய். இன்று, நல்லெண்ணைய் பற்றிய விழிப்புணர்வு என்பது மக்களிடையில் குறைந்துக்கொண்டே போகிறது. இந்த தருணத்தில் தன்னுடைய மேலாண்மை பட்டப்படிப்பை பெங்களுரில் முடித்துவிட்டு, 2013ம் ஆண்டு, அங்கம்மாள் அக்ரோ புஃட்ஸ் என பிரத்யேகமாக செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் வியாபாரம் செய்துவரும் திரு. அப்பு ராம்குமார் அவர்களை சந்தித்தோம்.

எண்ணெய் என்றால் அது நல்லெண்ணை மற்றும் தான். காரணம் நம்முடைய மக்கள் நாகரீகமடைந்தப்பின், பசு வில் இருந்த எடுக்கப்படும் நெய்யைக் கொண்டே சமைத்து வந்தனர். பின் எள்ளுலிருந்து எடுக்கப்பட்டு, அதில் சமைத்தனர். அதைப் அப்போது எள் 10 நெய் ஸ்ரீ எள்ணெய், காலப்போக்கில் மருவி, எண்ணெய்யானது. பின் தேங்காய் எண்ணெயில் இருந்து எண்ணெய் எடுத்து அதற்கு தேங்காய் எண்ணெய், கடலையில் இருந்து எண்ணெய் எடுத்து கடலை எண்ணெய் என்று நமது முன்னோர்கள் பெயர் வைத்தார்கள். எனவே, இதற்கு ஒரு நல்ல பெயர் அளிக்க வேண்டுமென சிந்தித்தப்பொழுது: இதில் உள்ள நன்மைகளைக் கண்டு, நல்லெண்ணை என்று பெயரிட்டனர். 1976ம் ஆண்டு திரு. ஆர்.எம். சின்னையா அவர்களால் தொடங்கப்பட்ட எங்களின் எண்ணெய் வியாபாரம் அவரைத் தொடர்ந்து என்னுடைய தந்தை திரு. இளங்கண்ணன் அவர்கள், தற்போது நான் மூன்றாம் தலைமுறையாக இந்த தொழில் ஈடுபட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நாட்டிலும், அவரவர்களின் தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறுதான் எண்ணெய்கள் பயன்படுத்துகின்றனர். இன்றைக்கு சந்தையில் ஏகப்பட்ட எண்ணெய்கள் புதிய புதியப் பெயர்களில் விற்கப்படுகிறது. ரீப்பைண்டு, ரைஸ் ப்ராண்ட் என பல பல எண்ணெய்கள் கண்கவர் விளம்பரங்களுடன் வளம் வந்துக்கொண்டே இருக்கிறது.

ஆனால் செக்கில் ஆட்டப்படும் நல்லெண்ணைய் எள்ளை போட்டு ஆட்டி எண்ணெயை பிழிந்து எடுத்து, அத்தோடு எள்ளுடன் கருப்பட்டியை சேர்த்து சிறிதுசிறிதாக செக்குகளை சுழல வைப்பதன் மூலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியே வரும். இந்த எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் அதன் மணமும், ருசியும் அபாரமாகவும், அலாதியாகவும் இருக்கும். இன்று, பல அயல்நாட்டுக் நிறுவனங்கள், ரீப்பைண்டு ஆயில் என மக்கள் சென்று வருவதினால், இன்று செக்கு எண்ணெய்களால் பெரிதளவில் இலாபம் இல்லை. இருப்பினும், மக்களிடம் செக்கு எண்ணெய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே நாங்கள் போராடி வருகிறோம்.

எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். எள்ளில் வெள்ளை எள், கருப்பு எள், சிவப்பு எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

1. நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத்தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது. நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
2. வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண்நோய், தலைக்கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.
3. நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர்ரத்தஅழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது.
4. நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம், எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும் போக்குகிறது.’ என கூறினார்.

தொடர்புக்கு - 9043753592

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top