ஆரோக்கியம் அளிக்கும் ஆயுர்வேதம்!

ஆரோக்கியம் அளிக்கும் ஆயுர்வேதம்!

நோயில்லா வாழ்க்கை வாழ்வதே நிறைவான செல்வம். இயற்கையால் கிடைக்கும் ஆரோக்கியம் என்பது இன்றியமையாது. இதனாலேயே தான் ஆயுர்வேத சித்த மருத்துவ முறைகள் இன்றும் பலனளிக்கின்றன. நம்முடைய உடலுக்கு இயற்கையாகவே தானாக குணமடையும் தன்மையுள்ளது. அத்தோடு இந்த ஆயுர்வேத மருத்துவத்தை கையாளும் போது அது கூடுதல் பலனளிக்கிறது.' என்கிறார் சித்த ஆயுர்வேத மருத்துவர் SVS முர்கேஷ் அவர்கள்.

மருத்துவர் SVS முர்கேஷ் அவர்கள், தமிழகம் மட்டுமின்றி கேரளா. கர்நாடகா, ஆந்திராப்பிரதேசம், தெலுங்கானா என தேவை எங்கு உள்ளதே அங்கு சென்றே சிகிச்சை அளித்துவருகிறார். தற்போது மதுரைக்கு வந்திருக்கும் சித்த ஆயுர்வேத மருத்துவத்தின் பலனைப் பற்றி அறிய சந்தித்தோம்.

'இயற்கைதான் மிகப்பெரிய சக்தி. அதற்கு அபரிவிதமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. இதனைக் கொண்டு தான் சித்த ஆயுர்வேத மருத்துவம் செய்யப்படுகிறது. இதனாலே எந்த வகையான நோயையும் எங்களால் குணப்படுத்தப்பட முடிகிறது.

1994-ம் ஆண்டு முதல் சித்த ஆயுர்வேத மருத்துவத்தை என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மட்டுமே சிகிச்சையளித்து வந்தேன். அதின்பின் 2002-ம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு சுமார் 15 ஆண்டுகளாக சிகிச்சையளிக்கிறேன். இதில் கோவை, ஆத்தூர், கொல்லம், விஜயவாடா என தேவை எங்கு உள்ளதே அங்கு சென்று தங்கியே சிகிச்சையளிக்கிறேன். சித்த ஆயுர்வேத மருத்துவத்தை பொருத்தவரை எந்த வகையான நோயையும் குணப்படுத்திடலாம். அதிலும் என்னிடம் சிகிச்சைக்காக வருபவர்கள் பெரும்பாலும் அலோப்பதி மருத்துவர்களினால் குணப்படுத்தப்பட முடியாமல் அனுப்பபட்டவர்களே. அப்படிபட்டவர்களை அவர்களின் நோய்யின் தாக்கம் பொருத்து 3 முதல் 4 மாததிற்குள் குணப்படுத்திவிடுவோம்.

தற்போது கூட மதுரையில் தசைப்பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஐந்தரை வயது குழந்தைக்கு ஒரு வயதிலிருந்து பிசியோதெரபி அளிக்கப்பட்டு வந்தது. என்னினும் அந்த நோயிலிருந்து குணமடையவில்லை. தற்போது நாங்கள் சிகிச்சையளிக்க தொடங்கிய ஒன்றரை மாதத்தில் கம்பியை பிடித்து நடக்கத் தொடங்கிவிட்டது.

அதேப்போல தற்போது மதுரையிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட மற்றொரு குழந்தைக்கும் தற்போது சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறேன்.

அக்குழந்தை கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டு முதுகிலேயே அமர்ந்துவந்தது. தற்போது சிகிச்சையை தொடங்கிய சில நாட்களிலேயே சரியாக அமரத் தொடங்கிவிட்டான். இதுப்போல எலும்புப் பிரச்சனை, சதைப்பிரச்சனை, நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வு காணமுடிகிறது. மதுரையில் பலரும் இதுப்போல பாதிப்பிற்குள் உள்ளாகியுள்ளார்கள். அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் மதுரையிலேயே சுமார் 4 மாதங்கள் தங்கி சிகிச்சையளிக்கவுள்ளேன். விரைவில் மருத்துவமனை ஒன்றையும் துவங்கி, சித்த ஆயுர்வேத மருத்துவத்தை கொண்டு குணமளிக்கவுள்ளோம்.' என கூறினார்.

தொடர்புக்கு:  8681861616

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top