மதுரையில் ஒரு இலங்கை பாரம்பரிய உணவகம்!

மதுரையில் ஒரு இலங்கை பாரம்பரிய உணவகம்!

மதுரை என்று சொன்னாலே நம்மூர்க்காரர்களுக்கும் சரி, வெளியூர்காரர்களுக்கும் சரி முதலில் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சியம்மன் கோவில், அடுத்தப்படியாக சாப்பாடு, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சாப்பாடு ஃபேமஸ், ஆனா சாப்பிட்டிற்கே மதுரை ஃபேமஸ்-னுதான் சொல்ல வேண்டும்.

காரைக்குடி முதல் காண்ட்டீணென்டல் வரை அனைத்துமே மதுரைக்கு வந்துவிட்டது. வாரக்கடைசியானாலே நண்பர்களோடு டின்னர் போகும் எங்களைப் போன்ற இளசுகளுக்கு புதுப்புது உணவகங்களை தேடுவதே வேலை. அப்படி நான் தேடியபோது கண்டதுதான் ஆப்பம்ஸ் - ஹாப்பர்ஸ். கே.கே.நகர் ஏ.ஆர்.மருத்துவமனையின் எதிர்புறம் அமைந்துள்ள இந்த ரெஸ்டாரண்டிற்கு சென்ற எங்களுக்கு கிடைத்ததே ஒரு புதிய அனுபவம்.

முழுக்க முழுக்க ஆப்பம் மற்றும் இடியாப்பம்தான் இங்கு ஸ்பெஷல். இன்டோ-லங்கன் உணவகமான இது, இந்திய உணவில் ஸ்ரீலங்கா உணவின் சுவையை தருவதே இந்த ஃப்யூஷன்.

தோசை, ஆப்பம், இடியாப் பம், பரோட்டா என நம்மூர் உணவு வகைகளைக் கொண்டிருந்தாலும் இவர்களின் சைட்-டிஸ் பக்கா மாஸ். முழுக்கமுழுக்க இலங்கையின் கைப்பக்குவத்தில் சீனி சாம்பல், பூல் சாம் பல், சொதி, தேங்காய் பால், முழு மீன் வருவல் என கார சாரமாக கலக்கியுள்ளனர் இந்த ஆப்பம்ஸ் - ஹாப்பர்ஸ். முற்றிலும் மாறுபட்ட ஒரு கைபக்குவத்தில் கிடைத்த உணவுகளின் ருசி கண்டு இந்த ஆப்பம்ஸ் - ஹாப்பர்ஸின் உரிமையாளர் திருமதி. சுபா அவர்களுடன் சிறு உரையாடல் நடத்தினோம்.

எமது ருசியின் இரகசியம்..

கடந்த பத்து ஆண்டுகளாக நான் இலங்கையில் தான் இருந்தேன். மேலும், சமையல் என்பதில் சிறு வயதிலிருந்தே எனக்கு ஆர்வம் அதிகமுண்டு. என்னுடைய திருமணத்திற்கு பிறகு நான் இலங்கை சென்று என்னுடைய சமையல் ஆர்வத்தை அதிகப்படுத்திக்கொண்டேன். அதன்பின்  தற்போது இந்தியா வந்து இந்த உணவகத்தை கடந்த ஏப்ரல் மாதம் துவங்கினோம். அத்தோடு இந்த உணவகத்தில் நான்தான் செஃப். இனிப்பு வகைகளை என்னுடைய தாயார் தயார் செய்கிறார்கள். எனவே, வீட்டின் கைப்பக்குவத்தில் தான் இங்கு அனைத்து உணவுகளையும் தயார் செய்வதுண்டு.

உங்களைப் பொருத்தவரை இந்த உணவகத்தின் ஸ்பெஷல் என்றால்?..

பிஸ் ப்ரை தான். மற்ற உணவகங்களுக்கும் எங்களுக்கும் பிஸ் ப்ரையில் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு. அதை உண்டால் மட்டுமே உணர முடியும். இதில் சம்பல் மற்றும் சீனி சம்பல் மட்டுமே இலங்கை சுவையிலும், மற்ற அனைத்துமே யாழ்பாணத்தில் கிடைக்கும் பக்குவத்தில் தயார் செய்கிறோம்.

ஆரோக்கியம் மற்றும் தரம்..?

எங்களின் முக்கிய கோட்பாடே எங்களுடைய தயாரிப்புகள் அனைத்தும் வீட்டு உணவைப் போலவே இருக்க வேண்டும் என்பது. எனவே எந்த ஒரு கலரிங்கும், ப்ரிசர் வேட்டிவ்ஸ்-ம் உணவில் சேர்க்கப்படமாட்டாது. ப்ரோசன் மீட் கிடையாது. அன்றைக்கு தயார் செய்யப்படும் உணவுகளை அன்றே விற்று தீர்க்கப்படும்.

மக்களின் மத்தியில் உங்களுக்கான வரவேற்பு..

நிச்சயம் இதுவரை நல்ல வரவேற்பு இருக்கிறது. பை-பாஸ் ரோட்டிலிருந்தும் எங்களின் உணவகத்தை தேடி வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். மேலும், குழந்தைகள், முதியவர்கள் என உணவுகளின் தயாரிப்பில் அதற்கேற்றவாறு முக்கியத்துவம் அளித்து தயார் செய்து வருகிறோம். மதுரையில் அதிகமாக உணவகங்களைத் தேடி இரவு உணவுக்காக செல்லும் இளைஞர்கள் மற்றும் குடும்பத்திற்கு இந்த இடம் இரவு 7 மணி முதல் 11 மணி வரை திறந்திருக்கும்.

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top