பிரத்யேக டிசைன்கள்தான் எங்கள் வெற்றியின் ரகசியம்! அசத்தும் ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை!

பிரத்யேக டிசைன்கள்தான் எங்கள் வெற்றியின் ரகசியம்! அசத்தும் ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை!

மதுரையில், தங்க நகை வியாபாரத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் நிர்வாக இயக்குனரும், ஸ்மார்ட் மதுரை ஆவதற்கு முன்பே தனது நிறுவனத்தின் கார்பார்க்கிங்கை ஸ்மார்ட் பார்க்காக அமைத்த பெருமை கொண்டவரும், ஒவ்வொரு நகைகளிலும் தனித்துவத்தைக் கொண்டுவந்த திரு.செல்வம் அவர்களின் விசேஷ பேட்டி.

கூட்டுக்குடும்ப நடைமுறை ஏறக்குறைய வழக்கொழிந்தே போய்விட்ட நிலையில், மதுரையின் ஒரு நிறுவனம் நான்கு சகோதரர்களின் பரிபாலனத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிநடைபோடுகிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பரபரப்பான மேலமாசி வீதியில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது ஸ்ரீ கிருஷ்ணா நகைமாளிகை. இவர்களின் நகைகளைப் போலவே ஸ்ரீ கிருஷ்ணா நகைமாளிகையின் கட்டிடம்கூட தனித்தன்மையுடன் ‘பளிச்’சென்று இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் குளுகுளு ஏசி வரவேற்க, அதைவிடக் குளிர்ச்சியாக எம்மை வரவேற்றார் திரு.செல்வம், ஸ்ரீ கிருஷ்ணா நகைமாளிகையின் சேர்மன்!

“நகைத்தொழிலில் நான் பெற்ற அனுபவத்தையும், தரமான நகைகளை மட்டுமே விற்பனை செய்வது என்ற ஒரு கொள்கையையும் முதலீடாக வைத்து 1990ஆம் ஆண்டு தனியாக இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம். எனக்குத் தோள்கொடுத்தது என் சகோதரர்களான ஜெகதீசன், மணிவாசகன், சிவசங்கர். எமது உண்மைக்கும் உழைப்புக்கும் மக்கள் தந்திருக்கும் பரிசு இந்த 25 ஆண்டுகளின் அனுபவம்” என்கிறார் திரு.செல்வம்.

இந்த வெள்ளி விழாவைக் கொண்டாடும் முகமாக கடந்த 19ஆம் தேதி, மேலமாசி வீதியிலேயே இன்னொரு கிளையைத் திறந்து வைத்து மதுரை மக்களுக்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் திரு.செல்வம் மற்றும் சகோதரர்கள்!

“இந்தியா மட்டுமன்றி உலகில் எங்கு நகைக் கண்காட்சிகள் நடைபெற்றாலும் அதில் கலந்துகொண்டு, அவற்றில் தனித்துவமாக விளங்கும் நகை டிசைன்களை மதுரையில் அறிமுகப்படுத்துகிறோம். இதனால்தான், ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையில் வாங்கக்கூடிய தனித்துவமான புத்தம்புது டிசைன் நகைகளை வேறெங்கும் நீங்கள் காணமுடிவதில்லை” என்கிறார் திரு. செல்வம்!
நகைமாளிகையை சுற்றிப் பார்த்தால் திரு.செல்வம் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரிகிறது. மாடர்ன் டிசைன்களோ, ஆன்டிக் டிசைன்களோ - இங்குள்ள நகைகள் ஒவ்வொன்றும், ஒன்றுக்கொன்று மிக அழகான, அதேநேரம் மிக வித்தியாசமான வடிவங்கள்! தங்கம் மட்டுமன்றி, வைரம், பிளாட்டினம் என்று ரகம் ரகமாய், புதுசு புதுசாய், தினுசு தினுசாய் கண்களைப் பறிக்கின்றன ஸ்ரீகிருஷ்ணா நகைமாளிகையின் நகைகள்! வைரத்திற்கென்றும் வெள்ளிக்கென்றும் தனித்தனி பிரிவுகள் இருக்கின்றன.

வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அழகழகான டிசைன்களில் லைட் ஜூவல்லரி எனப்படும் ஒரு கிராம் நகைகள் கூட நிறைந்திருக் கின்றன இங்கு! இதனால், எந்தப் பொருளாதார நிலையில் இருப்பவர்களும் தமது வசதிக்கேற்ப தங்க நகைகளை வாங்கி மகிழும் வாய்ப்பை ஸ்ரீகிருஷ்ணா நகை மாளிகை வழங்குகிறது.

“செய்கூலி, சேதார தள்ளுபடி என்பதில் எனக்கு உடன்பாடே இல்லை. இவற்றில் தள்ளுபடி வழங்கினால் தரமும் தனித்துவமும் அடி பட்டுப் போய்விடும். பிராண்டட் கடை, ஸ்டாண்டர்டு விலை... இதுதான் எங்கள் தாரக மந்திரம்! இதனால்தான் வாடிக்கையாளர்களுக்கு தரமான நகைகள் நியாயமான விலையில் கிடைக்கின்றன” என்றும் கூறினார்.

அழகுமிளிரும் நகைகளின் அணிவகுப்பு ஒருபுறமிருக்க, நேர்த்தியான நிர்வாகமும் ஸ்ரீ கிருஷ்ணாவின் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கிறது. எவ்வளவுதான் கூட்டம் என்றாலும் தூய்மையாகவே இருக்கிறது இந்த நிறுவனத்தின் உட்புறமும் வெளிப்புறமும்! அவரிடம் கேட்டால், “இப்போதைய தலைமுறையினர் நகையின் தரம், விலையை மட்டும் பார்ப்பதில்லை. அவர்களின் வசதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை டிசைனோ, சர்வீஸோ... இரண்டுமே வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு” என்று மக்கள் மனங்களையும் படித்துக் கூறுகிறார் திரு.செல்வம்!

நகைமாளிகைக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் சந்திக்கத் தவறுவதில்லை திரு.செல்வம்! நம்முடன் பேசிக் கொண்டிருக்கும் போதும், வாடிக்கையாளர்களுடன் சகஜமாகப் பேசி அவர்களது சௌகரியத்துக்கும் சரி, திருப்திக்கும் சரி... மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார். இதை, தான் குருவாகப் போற்றி மதிக்கும் தங்கமயில் சேர்மன் திரு.பலராம கோவிந்ததாஸ் மற்றும் அவரது சகோதரர் திரு.ரமேஷ் ஆகியோரிடமிருந்து கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்.

“சிறுகச் சிறுகச் சேர்க்கும் பணத்தை நிலத்துக்கு அடுத்து நகையில்தான் மக்கள் முதலீடு செய்கிறார்கள். நகைகள் பெருகப்பெருக அவர்களுக்கு வாழ்க்கைமீது நம்பிக்கையும் பெருகுகிறது. இதை மனதில் வைத்து, இங்கு விற்பனையாகும் ஒவ்வொரு நகையையும், இறைவனை மனதில் நிறுத்தி மனப் பூர்வமாக ஆசிர்வதித்தே விற்பனை செய்கிறோம். அதனால்தானோ என்னவோ, இங்கு ஒரு முறை நகை வாங்குபவர்கள், மிக விரைவிலேயே அடுத்தடுத்து தொடர்ச்சியாக நகை வாங்க ஆரம்பிக்கிறார்கள். மேலும், ஆன்மீகமும், முயற்சியும், முழுமையான ஈடுபாடும் தான் ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் அடிப்படை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம்” என்றும் சொன்னார்.

இங்கு குறிப்பிடவேண்டிய மற்றொரு விஷயம், ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் ‘ஸ்மார்ட் பார்க்கிங்’. வெளிநாடுகளில், குறைந்த இடப்பரப்பில் அதிகளவான வாகனங்களை நிறுத்தும் தொழில்நுட்பம்! உங்கள் வாகனத்தை, ஒரு பிரமாண்டமான லிப்ட் போன்ற அமைப்பின் கீழ்ப்பகுதியில் நிறுத்தி விட்டால், ‘சர்’ரென்று உங் கள் வாகனம் உயரத்தில் பாதுகாப்பாக போய் நிற் கிறது. பர்சேஸிங் முடிந்ததும் மீண்டும் ‘சர்’ரென்று கீழே வந்துவிடுகிறது.
“ஸ்மார்ட் சிட்டியாக நம் ஊரை அரசு அறிவித்திருக்கிறது. அதற்கு, முதலில் நாம் ஸ்மார்ட்டாக மாறவேண்டாமா? அதற்காகத்தான் இந்த ஸ்மார்ட் பார்க்கிங்” என்று விளக்கமளித்து, மக்கள் அனைவருக்கும் தம்மு டைய இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு விடைகொடுத்தார் திரு.செல்வம்!

தனக்கும், தன் வாடிக்கையாளர்களுக்கும் மட்டுமன்றி, தன் நாட்டின் கொள்கைகளுக்கும் உண்மையாக நடந்துகொள்ளும் திரு. செல்வம் மற்றும் அவரது சகோதரர்களின் பண்புதான் ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் வெற்றிக்குக் காரணம் என்று நாம் கூறினால், அதை யாராலும் மறுக்க முடியாது. அதுமட்டுமல்ல, அட்சயதிருதி அன்று நகை வாங்கினால், அதுபெருகும் என்பது ஐதீகம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணா நகை மாளிகையில் நகைகள் வாங்கினால்  வருடத்தில் ஒவ்வொரு நாளும் நமக்கு, அட்சய திருதியை தான்!

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top