இல்லங்களை சொர்க்கபுரியாய் மாற்றிடும் இண்டீரியர் வடிவமைப்புகள்!

இல்லங்களை சொர்க்கபுரியாய் மாற்றிடும் இண்டீரியர் வடிவமைப்புகள்!

இண்டீரியர் வடிவமைப்புகள் தான் இன்று பெரும்பாலும் கட்டப்படும் வீடுகளின் தேவையாக இருக்கிறது. அழகான இண்டீரியர்ஸ், மரக்கட்டைகளான தூண்கள், வீட்டின் ஷோகேஸ்களில் உள்ள அலகாரப் பொருட்கள் என அடிக்கிக் கொண்டே போகும் அளவினான இண்டீரியர் வேலைப்பாடுகள் இன்று மக்களின் தேவைகளாக இருக்கின்றன. இந்த ஷோகேஸ் வேலைப்பாடுகள் தான் அதிக நுணுக்கங்களையும், அதிக வேலைப்பாடுகளை கொண்டதாயும் இருக்கும். இதுப்போன்ற வேலைப்பாடுகளுக்கு அதிகமான பொருமை மிக அவசியம். இந்த மாதிரியான வேலைப்பாடுகளை மதுரையிலே சிறப்பான முறையில் அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் செய்து வருகிறார் திரு. ரஞ்சித்குமார் அவர்கள். இதைப் பற்றி  மேலும் அறிந்துக்கொள்ள அவர்களின் இடத்திற்கு விரைந்துதோம்.

'இண்டீரியர் வேலைப்பாடுகள் இன்று அத்தியாவசிமாக இல்லாத போதிலும், இதற்காக தேவை என்பது மக்களின் மத்தியில் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. பல இலட்சங்கள் செலவு செய்து கட்டிய வீடுகளில் சில ஆயிரங்கள் செலவு செய்ய மக்கள் அதிகம் தயங்குவதில்லை. மேலும், நான் என்னுடைய கல்லூரிப் படிப்பினை முடித்து தூத்துக்குடியில் ஒரு டிம்பர் நிறுவனத்திலும் பின் இந்தோனேசியாவில் ஒரு டிம்பர் நிறுவனத்திலும் பணியாற்றினேன். அவர்கள் உலகம் முழுவதும் டிம்பரை வாங்கி பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தனர்.

அப்போது நான் இந்தியா மக்களின் தேவை என்ன என்பதை நன்கு அறிந்துக்கொண்டேன். ஒரு இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவிற்கு வந்து சுயமாக தொழில் துவங்க முடிவு செய்தேன். எனவே, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் ஒரு இண்டீரியர் தொடர்பான பணியைத் துவங்கினேன். எனக்கு சிறு வயதிலிருந்தே பெயிண்டிங், கார்விங் போன்ற விஷயங்களில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்து வந்தது. எனவே, என்னுடைய டிம்மர் அனுபவத்தோடு இண்டீரியர் வேலைகள் எளிதானவைகளாகவே இருந்தது.

அப்போது மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தஞ்சாவூர் கிளையில் சில இண்டீரியர் வேலைப்பாடுகள் ஆர்டர் வந்தது. இது எனக்கு அதிகமான வாய்ப்புகள் வர வழிவகுத்தது. அத்தோடு கூட மினியேச்சர் தொடர்பான ஆர்டர்கள் வரத்தொடங்கியது. ஒரு பெரிய விஷயங்களின் டோமோவாக இந்த மினியேச்சர் அமைந்திருக்கும். அதில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஸ்ரீவீ கல்லூரி, மெட்ரோ ரயில் செய்யும் அல்ஸ்டாம் நிறுவனத்திற்கும் செய்தேன். அதனைத் தொடர்ந்து யுஊ காமராஜ் அவர்களுக்கு றயவநசறயலள பற்றின ஒரு பிராஜெக்டையும் செய்துக் கொடுத்தேன். இது பெரியதளவில் பேசப்பட்டது. மக்களின் தேவை என்னவோ, அவர்களின் பஜ்ஜெட்டைப் பொருத்து அவர்கள் விரும்புவதைவிட சிறப்பான முறையில் வேலைப்பாடுகளை செய்துக் கொடுத்து வருகிறேன்' என கூறினார்.

தொடர்புக்கு: 9443153409

Tags: News, Beauty, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top