ஆண்களுக்கான டிரெண்டிங் ப்ராண்ட் புல் ஆன் ஷோரூம்!

ஆண்களுக்கான டிரெண்டிங் ப்ராண்ட் புல் ஆன் ஷோரூம்!

பொதுவாகவே, ஆண்களுக்கு ஆடைகள் என்றாலே அது சர்ட், பேண்ட் மட்டும்தான். இதனால் ஆண்களுக்கென பிரத்யேகமாக ஷோரூம்கள் மதுரையைப் பொருத்தவரையில் மிகவும் குறைவுதான். ஆனால், இன்றைய பேஃஷன் ட்ரெண்டில் சர்ட், பேண்ட்களிலேயே பல்வேறு புதிய டிசைன்கள், புதிய வகைகளில் தயார் செய்யப்படுகின்றன.

இன்றைய இளைஞர்களும் தங்களுக்கு பிரியமான சினிமா நட்சத்திரங்கள் அணிவதைப் போன்ற ஆடைகளை விரும்புகின்றனர். எனவே, ட்ரெண்டியான ஆடைகளுக்கு இளைஞர்களிடேயே வரவேற்பு உள்ளது. மதுரையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண்களுக்கென பிரத்யேக ஆடை ஷோரூமை தெற்குமாசி வீதி மற்றும் சின்ன சொக்கிகுளத்தில் கொண்டுள்ள இளைஞர்களை கவரும் புல்ஆன் ஷோரூமின் இயக்குநர் திரு.பிரபு அவர்களை சந்தித்தோம்.

‘ஆடைகளைப் பொருத்தவரை நாங்கள் தொடங்கியபோது இருந்ததைவிட இன்று அதிக மாற்றங்களை கண்டு வருகிறோம். புல்ஆன் என் பதில் ஒரு பாசிட்டிவ்வான வைப்ரேசன் இருக்கிறது. எனவே, அப்பெயரை சூட்டி 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எங்களின் முதல் கிளை சின்ன சொக்கிகுளம் பகுதியில் துவங்கினோம்.

சென்னை, கோவைப்போல நம்முடைய மதுரை இன்னும் பேஃஷன் ரீதியில் அதிகமான வளர்ச்சி காணவில்லை. நான் பி.இ. கணிணித்துறை பயின்றதால் சுமார் 8 ஆண்டுகாலம் சென்னையிலும், அதன்பின் கோவையிலும் பணியாற்றினேன். அப்போது கோவையில் இயங்கிவரும் ஆண்களுக்காக பிரத்யேக மல்ட்டி ப்ராண்ட் ஆடை ஷோரூம் ஒன்றை கண்டேன். அதன் பின்தான் நானும் என்னுடைய நண்பரும் இணைந்து இந்த ஷோரூமை துவங்கினோம்.

எனினும், இதை தொடங்குவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பாகவே மும்பை, பெங்களுரூ போன்ற இடங்களுக்கு சென்று உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களை சந்தித்து மார்கெட் நிலவரம் குறித்தும் பேஃஷன் பற்றியும் அறிந்து கொண்டோம். அதில் குறிப்பாக 18 முதல் 30 வயதானோரின் விருப்பம் மற்றும் ஆடைத் தேவை எப்படியுள்ளது என்பதை பற்றி அறிந்து அது தொடர்பாக செயலாற்றினோம். தொடக்கத்தில் ஒரு சில ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் காலப்போக்கில் அவையும் சரியாகி விட்டது.

இங்கு மல்ட்டி ப்ராண்ட் ஆடைகளோடு தரத்தை முன்நிறுத்தி, மெட்டிரியல்களை நாங்களே வாங்கி, மும்பையில் ஆர்டர் கொடுத்து, பிரத்யேகமாக தயார் செய்து விற்பனை செய்கிறோம். அத்தோடு டி-சர்ட்ஸ்களும் கஸ்டமைசெஷனாக செய்கிறோம். எங்களின் ஒரு சிறப்பம்சமாக ஒரு நாள் டெலிவரியில் டி-சர்ட் பிரிண்ட்டிங் செய்துக் கொடுக்கிறோம்.

இன்று வாடிக்கையாளர்களை பொருத்தவரை இரண்டு தரப்பினர் இருக்கின்றனர். அதில் ஒரு தரப்பினர் கேஷ்வலும், புரபெஷ்னலும் கலந்த வகையில் இருக்க வேண்டுமென்றும், மற்றொரு தரப்பினர் முழுவதும் ட்ரெண்டியாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறார்கள். அத்தோடு இன்று பெரும்பாலான இளைஞர்கள் சினிமாவில் தங்களுக்கு விருப்பமான நட்சத்திரம் அணியும் வகையிலான ஆடை போன்று அணிய விரும்புகிறார்கள். அத்தோடு இன்று புதிய ட்ரெண்டாக ஜாக்கர் பேண்ட், பலூன் பிட், செக்டு பிரண்ட் பேண்ட்ஸ் தான் இன்று இளைஞர்களின் விருப்பம்.

இந்த வகையாக பேஃஷன் மும்பை, பெங்களுரூ, கேரளாவை முன்நிறுத்தியே ட்ரெண்டாகுகிறது. ஆனால், அங்கு ட்ரெண்டான ஒன்று நம்முடைய மக்களின் வழக்கத்திற்கு வருவதற்கு 6 மாதங்களாவது எடுத்துக்கொள்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் அடுத்த புதிய பேஃஷன் அங்கு வந்து விடுகிறது. உதாரணத்திற்கு கேரளாவில் நீளமான சட்டை அணிவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ட்ரெண்ட் ஆனால் அவை இன்று தான் நம்முடைய ஊரில் ட்ரெண்டாகிறது.

ஆனால் நம்முடைய ஊரைப் பொருத்தவரை டி-சர்ட்டை விட சட்டைகளுக்குத்தான் விருப்பம் அதிகம். அதில் ப்ளைன் மற்றும் செக்டு சர்ட்ஸ் வருடம் முழுவதும் மூவிங்காக இருக்கும். ஒரு சில மட்டுமே அப்டேடாகிக் கொண்டே இருக்கும்.’ என கூறினார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top