உலகத்தரப் பரிசுப் பொருட்களுக்கு ‘பாலிக்கிராஃப்ட்’!

உலகத்தரப் பரிசுப் பொருட்களுக்கு ‘பாலிக்கிராஃப்ட்’!

கைவினைப்பொருட்கள் என்றாலே சிறப்பான ஒரு வரவேற்பு பெரும் ஒன்று. அதுவே ஆன்டிக்பொருட்கள் என்றால் அதற்கான மதிப்பே தனி. முழுக்கமுழுக்க கலைநுட்பத்துடன் திகழும் இந்த கலைப்பொருட்களின் கலைக்கூடமாக திகழ்கிறது கே.கே. நகரில் உள்ள பாலிக்கிராஃப்ட்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கபட்ட பாலிக்கிராஃப்ட் இன்று கலை ரசிகர்களுக்கு ஒரு விருப்பமான இடமாகவே அமைந்துள்ளது. வெங்கலத்தால்ஆன பொருட்கள், புத்தர் சிலை, செயற்கைப் பூக்கள், மரத்தால்ஆன நாற்காலி, டேபிள், மரச்சிலைகள் என அடிக்கிக்கொண்டே போகும் அளவிலான கலென்ஷன்களை நிரப்பியுள்ளனர். இந்த நிர்வகத்தினரின் கலையுணர்வு கண்டு இதன் உரிமையாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேசினோம்.

‘பொதுவாக நம் அனைவருக்கும் ரசணை ஆர்வம் சற்று அதிகமுண்டு. அதிலும் இன்று வளர்ந்துவரும் நவநாகரீகத்தினால் பழமையான விஷயங்கள் பல மறைந்துவிட்டது. இதனால் பழமையான விஷயங்களையும் ஆன்டிக் பொருட்களையும் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பாலிக்கிராஃப்டைத் தொடங்கினோம்.

இங்கு விற்பனை செய்யும் ஒவ்வொரு பொருளும் இந்தோனேஷியாவிலிருந்து பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்கிறோம். இது மாதிரியாகப் பொருட்களை இப்படியும் தயார்செய்யமுடியுமா என்கிற எண்ணத்தை தோற்றுவிக்கும். இங்குவரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் வாடிக்கையாக வரத்தொடங்கியுள்ளார்கள். காரணம் ஒவ்வொரு முறையும் புதுப்புதுப் பொருட்களை மட்டுமே கொண்டுவந்து விற்பனை செய்வதுண்டு. மேலும், நாங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு பின்புலம் நிச்சயம் இருக்கும். அந்தளவிற்கு தேர்வு செய்துகொண்டு வருகிறோம். இது மக்களிடையில் பெரிதளவில் நல்லதொரு வரவேற்பனைப் பெற்றுள்ளது.

தற்போது சென்ற ஆண்டு முதலாக ஜூட், பேன்ஸி, லெதர்பைகளையும், களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு சில கைவிணைப் பொருட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.’ என கூறினார்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top