மீனா பேஷன் டிசைனர்ஸின் பல்பொருள் கண்காட்சி

மீனா பேஷன் டிசைனர்ஸின் பல்பொருள் கண்காட்சி

கண்காட்சி என்பது அனைவரையும் கவரும் வகையில் எளிதாக கிடைத்திராத அரிய கலைநயம்மிக்க வேலைப்பாடுடன் கூடிய பொருட்களை காட்சிப்பொருளாக பார்த்து ரசிக்கவும் வாங்கி மகிழவும் ஏதுவான இடம்.

சாதாரணமாக கிடைக்கும் சேலை டிசைன்கள், சுடிதார் ரகங்கள் மற்றும் பேன்சி நகைகள் மட்டும் கண்காட்சியாக நடத்துபவர்களின் மத்தியில், இன்று JC ரெசிடென்சி என்றால் அவர்களுடைய உபசரிப்பையும் கடந்து அனைவராலும் நினைவு கூறப்படும் அளவுக்கு இருப்பது “மீனா பேஷன் டிசைனர் எக்ஸ்போ” தான்.

மீனா பேஷன் டிசைனர் எக்ஸ்போ-வின் நிர்வாக இயக்குனர் திருமதி.திவ்யா மற்றும் அவரது கணவர் திரு.ஹரிஹரன் அவர்களுடைய தொலை நோக்கு பார் வையும் பொதுமக்களிடம் அவர்களுக்கு இருக்கும் புரிதலும் தான் அவர்களின் வெற்றிக்கு காரணம். பல நகரங்களில் இவர்கள் பல்பொருள் கண்காட்சியை நடத்தி அதில் வெற்றி அடைந்ததற்கு முக்கிய காரணமாக இருப்பது, எங்கு கண்காட்சி நடக்கிறதோ அந்த இடத்தில் உள்ள மக் களுக்கு ஏற்றாற்போல், மக்களின் மனதை தெளிவுபட புரிந்துகொள்வதுதான்.

அதைப்போலவே, நம் மதுரை மக்களின் மனதை நன்கு புரிந்துகொண்டு, அதிலும் குறிப்பாக பெண்களின் விருப்பத்திற்கேற்ப இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் பிரத்யேகமாக தயாரிக்கும் தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து, தனித்துவமான டிசைன்களை மட்டுமே தங்களுடைய பல்பொருள் கண்காட்சியில் இடம்பெறச் செய்கிறார்கள். இந்த கண்காட்சியில் இடம் பெறும் டிசைன்களைப் போன்று மதுரையில் வேறெங்கும் ஒரே இடத்தில் காண்பது அரிது. இந்த அரிய எக்ஸ்போவில் தவறாமல் கலந்து கொண்டு, ஒரே இடத்திலேயே வெவ்வேறு மாநிலங்களின் பேஷன் டிசைன்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

இந்த கண்காட்சியில் மீனா பேஷன் டிசைனர்சின் தனிப்பட்ட தயாரிப்புகளுடன் மும்பை, பெங்களூரு, கோயம்புத்தூர், கேரளா, ஆந்திரபிரதேசம், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களிலிருந்து பேஷன் டிசைன் பொருள் உற்பத்தியாளர்கள் தங்களுடைய அற்புதமான மிக சமீபத்திய படைப்புகளுடன் பங்குபெறுகிறார்கள். இந்த கண்காட்சியில் முக்கியமாக பெண்களையும் குழந்தை களையும் வெகுவாக கவருகின்ற பொருட்கள் அதிக அளவில் இடம்பெறுகின்றது. இதில் சில்க் கலம்காரி, காஞ்சிபுரம் பட்டு பொருட்கள், டசர் பட்டு, சணல் பொருட்கள், தர்மாவரம் பட்டு பொருட்கள், ஆந்திரா மாநிலத்தைச் சார்ந்த கோச்சம் பள்ளி பட்டு, ஆரணி பட்டு ஆகியவற்றாலான பல்வேறு விதமான கலைநயமிக்க பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

அத்துடன் கிரேப் சில்க்கிலான சீக்கு வன்ஸ் மற்றும் பேட்சவொர்க் வேலைகளுடன் கண்ணை கவருகின்ற சேலைகளும், ப்யூர் ஜார் ஜட்டில் கண்ணாடி மற்றும் கை வேலைபாடுகளுடனான சேலைகளும், சிப்பான் சேலைகளில் சீக்குவன்ஸ் வேலைபாடுகளுடனும் என பல்வேறு விதமான அழகுப்படுத்தப்பட்ட பெண்களின் நல்ல அலங்காரத்திற்கு உகந்த சேலைகள் பார்வைக்கு வைக்கப்படுகின்றது. காட்டன் வகையறாக்களில், ஒரிஜினல் காட்டன் சேலைகள், சில்க் காட்டன் சேலைகள், மங்களகிரி காட்டன் சேலைகள், பிரிண்ட்டட் கலம்காரி சேலைகள், ஜுட் காட்டன் சேலைகள், கோட்டா காட்டன் சேலைகள் ஆகியவையும் இந்த கண் காட்சியில் இடம் பெற்று பார்வையாளர்களை அசத்தப்போகின்றன. அத்துடன் அழகிய மயில் கலம்காரி சேலைகள், கட்வொர்க் காம்பினேஷனோடு கூடிய பட்டு சேலைகள், டிசைனர் சேலைகள் முதலியவையும் இடம் பெறுகின்றன.

சிறு குழந்தைகளுக்கும் இளமங்கையருக்கும் தேவை யான ஹேண்ட் டையிடு அண்ட் பிளாக் பிரிண்டட் சல் வார் சூட்ஸ், காட்டன் சந்தேரி, பகல்பூர், மகேஸ்வரி தசர்ஸ், இக்கட்ஸ் மற்றும் கலம்காரி, காட்டன் டிசைனர் டாப்ஸ் மற்றும் கிரேப் சாட்டின், சில்க், ஜுட், சிப்பான், கோட்டா, தசர் அண்ட்ரா சில்க் ஆகியவற்றிலும் டிசைனர் டாப்ஸ் கண் காட்சியில் இடம் பெறுகிறது. கலம்காரி மோட்டிவ்களுடன் கூடிய டாப்புகளும், ரெடிமேட் டிசைனர் பிளவுசுகளும் எண்ணற்ற டிசைன்களிலும் ரகங்களிலும் காட்சியில் வைக்கப்படுகிறது.

தற்போது இந்த எக்ஸ்போவை தவற விட்டிருந்தாலும், வருடத்திற்கு மூன்று முறை நடக்கும் இந்த எக்ஸ் போவில் அடுத்தமுறை தவறாது கலந்துகொண்டு லேட்டஸ்ட் டிசைன்களைப் பற்றி அறிந்திடுங்கள். மீனா பேஷன் டிசைனர் எக்ஸ்போவில் ஒரு அங்கமாகவோ அல்லது இது போன்றதொரு எக்ஸ்போவை நடத்தவோ விரும்பினால் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

Cell : 9442363930, 8015080950

Tags: News, Beauty, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top