வெள்ளித்திரையில் மின்ன JPG Academy!

வெள்ளித்திரையில் மின்ன JPG Academy!

'சினிமா! இது தான் இன்று உலகை மொழிபாரா, அமைப்பு பாரா, ஏழைப் பணக்காரன் பாரா, எல்லோரையும் மகிழ்விக்கிறது. இன்று உலகை இயக்கும் ஒரு முக்கிய கருவியாக மீடியா மற்றும் சினிமா மாறிவிட்டது. மாறிவரும் கலாசாரம், வாழ்க்கை முறை என இதற்கும் சினிமா ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது. அத்தோடு இன்று பெரும்பாலான இளைஞர்கள் குறுப்பட இயக்குநர்களாகவும், டெக்னிஷன்களாகவும் வளம் வருகிறார்கள் என்றால் அதற்காக முக்கியப் பங்கும் சினிமாவிற்கு உண்டு. வெறும் அனுபவத்தினால் மட்டுமே ஒருவர் மீடியாவிலும் சினிமாவிலும் நுழைந்து வெற்றிக் கண்டிட முடியாது. அதற்கான அடித்தளமாக தான் கல்வி அமைகிறது. பெரும்பாலும் மீடியா தொடர்பான படிப்புகள் பயில விரும்புவோர் தேர்ந்தெடுப்பது சென்னை மாநகரமே. இதை மாற்ற வேண்டும், தென்தமிழகத்திலேயே தரமாக ஒரு கல்வியை ஏற்படுத்தி தரமுடியும் என்பதை முழு நம்பிக்கையோடு களமிறங்கி செயல்பட்டு வருகிறோம்.' என தொடங்குகிறார் திரு. மனோஜ் அவர்கள்.

மதுரை வண்டியூரில் இயங்கி வரும் JPG Academy-யின் முதல்வரான திரு. மனோஜ் அவர்கள் தங்களின் கல்வியகத்தின் மூலம் துடிப்புள்ள பல இளைஞர்களை மீடியாவிலும், சினிமாவிலும் பணியாற்ற தங்களின் கைத்தேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு வித்திட்டுள்ளார். அவர்களின் கல்வியகம் பற்றியும் அவர்கள் அளிக்கும் பயிற்சிகள் பற்றியும் அறிந்துக்கொள்ள மேலும் உரையாடினோம்.

'இன்றைய தலைமுறையினர் ஹை-டெக் வாழ்க்கையில் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு இன்று செய்முறை பயிற்சி தொடர்பான கல்விக் கற்பத்தில் தான் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். வர்த்தக ரீதியில் 2014ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரையிலான புள்ளி விவரத்தில் Media & Entertainment-ன் வளர்ச்சி 12.6% உயர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் இந்த வளர்ச்சியானது அதிகரித்துள்ளது, இனி வரவிருக்கும் காலங்களிலும் நிச்சயம் இந்நிலைத் தொடரும்.

இதனாலே கடந்த 2011-ம் ஆண்டு முதலாகவே நாங்கள் மீடியா தொடர்பான வகுப்புகளை நடத்தி வருகிறோம். இதற்கு முன்பு ராஜா முத்தையா மன்றத்தின் பின்புறத்தில் இயங்கி வந்த நாங்கள் தற்போது வண்டியூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள தாகூர் வித்யாலயம் பள்ளிக்கு நேர் எதிரே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் படித்த மாணவர்களில் சமீபத்தில் வெளிவந்த '8 தோட்டக்கள்' திரைப்படத்தின் இயக்குநர் திரு. ஸ்ரீகணேஷ் எங்களிடம் பயின்ற மாணவர் தான். அவரைப் போல இன்னும் பல பிரபல இயக்குநர்களிடம் துணை இயக்குநர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

தற்போது மீடியாவில் அதிகமாக தேவைகளும் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்புகளும் இருந்துவருகிறது. மேலும், இன்று விஷ்வல் மீடியாவின் தாக்கம் மக்களிடையில் அதிகம் உள்ளது. இதனால் Animation VFX, Cinemato Graphers, AV Editors, Sound Engineer -க்கும் இன்று தேவைகள் அதிகமுள்ளது. நம்முடைய தென்தமிழகத்தைப் பொருத்தவரை அதிகமாக இளைஞர்கள் தற்போது மீடியாவிற்குள் நுழைந்திட அதிகமான விருப்பம் காட்டி வருகிறார்கள். எனவே, அவர்களுக்கு ஏற்றவாறு எங்களின் பாடதிட்டங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

அதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோடு இணைத்து B.Sc Visual Media & Communication, B.Sc Animation, Diploma & PG Diploma in visual Media & Communication என்னும் பட்டங்களில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு க்ரீன் மேட் கொண்ட ஒரு ஸ்டுடியோ, வாய்ஸ் ரெக்காடிங் Dubbing Studio ஏற்படுத்தியுள்ளோம்.' என கூறினார்.

சினிமாவில் இன்று ஜாம்பவான்களாக திகழும் ஜனங்களின் கலைஞன் விவேக், இயக்குநர் அமீர், பாலா, மணிரத்னம், கார்த்திக் சுப்பராஜ், அட்லி ஆகியோர் மதுரையில் சென்று இன்று தங்களுக்கென ஒரு முத்திரைப்பதித்துள்ளனர். நாமும் சரியான பயிற்சியும், ஆர்வமும் கொண்டிருந்தால் ஜொலிக்கும் நட்சத்திரங்களாகலாம்.

தொடர்புக்கு: 9566833148

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top