ஜுவல் ஒன் நிறுவனம் - வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகை தயாரிப்பில் தடம் பதிக்கின்றது!

ஜுவல் ஒன் நிறுவனம் - வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகை தயாரிப்பில் தடம் பதிக்கின்றது!

எமரால்ட் ஜுவல்லரி இந்தியா லிமிடெட்டின் சில்லரை விற்பனை நிறுவனமாக “ஜுவல் ஒன் நிறுவனம்” செயல்பட்டு வருகின்றது. எமரால்ட் தங்க நகை உற்பத்தி நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கப்படுகின்ற தங்க நகைகள் யாவும் அவற்றின் உன்னதமான மற்றும் புதுமை நிறைந்த டிசைன்களுக்கும் பாரம்பரியத்திற்கும், தயாரிப்பில் பழைமைமிக்க அனுபவத்திற்கும், சுத்தமான தங்கத்திற்கும், தங்கத்தின் தனி தன்மைக்கும் பெயர் பெற்றவையாகும்.

எமரால்ட் ஜுவல்லரி நிறுவனமானது மற்ற எந்த நகை தயாரிப்பு நிறுவனத்தை போலும் அல்லாது லட்சக்கணக்கான டிசைன்களை தன்னுடைய தனித்தயாரிப்புகளாக வாடிக்கையாகச் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது.

வரவிருக்கின்ற பண்டிகை காலத்தை உத்தேசித்து, தற்போது எமரால்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக வெள்ளி பரிசு பொருட்கள், வெள்ளியிலான சிறிய சிற்பங்கள், ஆன்மீகத்தை தொடுகின்ற சிறிய வெள்ளி பொருட்கள், செயின்கள், மோதிரங்கள் முதலியவற்றை தயாரித்து விற்க திட்டமிட்டுள்ளது. இத்துடன் விசேச விற்பனை முயற்சியாக பிளாட்டினத்தில் செய்யப்பட்ட நகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து ஊக்கப்படுத்திட திட்டமிட்டுள்ளது.

எமராலட் நிறுவனத்தின் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் சில்லரை விற்பனை அமைப்பாக இயங்கி வரும் ஜுவல் ஒன் நிறுவனமானது தமது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விற்பனை நிலையங்களில் மூலமாக விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றது. எனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜுவல் ஒன்னின் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் வைர நகை வியாபாரங்கள் சூடு பிடிக்கும் எனத் தெரிகின்றது.

இந்த புதிய வர்த்தக விஸ்தீகரிப்பு தொடர்பான தகவல்களை ஜுவல் ஒன் நிறுவனத்தின் விற்பனை ஒருங்கிணைப்பு அதிகாரி திரு.பி.ஜி.கிஷோர் தெரிவித்திருக்கின்றார். இவர் மேலும் தெரிவிக்கையில் அக்டோபர் மாதத்தில் தீபாவளி இடம் பெறுவதால், இதனை கொண்டாடும் விதமாகவும் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், தற்போது நான்காவது மாடியை கூடுதலாக பெற்றுள்ள சேலம் ஜுவல் ஒன் கிளையில் அக்டோபர் 16-ம் தேதி புதிததாக அறிமுகப்படுத்தப்படும் நகைகளின் விற்பனையை ஜுவல் ஒன்னின் விற்பனை தூதுவரும் நடிகையுமான சமந்தா அவர்கள் துவக்கி வைக்கின்றார்கள்.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top