சொர்க்கமாகும் இல்லங்கள்! இன்டீரியரில் கலக்கும் வீடுகள்!

சொர்க்கமாகும் இல்லங்கள்! இன்டீரியரில் கலக்கும் வீடுகள்!

ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள்... அலங்காரம் எத்தனை முக்கியமானது என்பதை உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் பழமொழி! இது ஆளுக்கு மட்டுமல்ல... வீட்டுக்கும் சரி அலுவலகங்களுக்கும் சரி சிறப்பாக பொருந்தும்.

நம்முடைய வீட்டின் நிலையை வைத்தே நம்முடைய வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் நம்முடைய குணத்தைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு மனிதர்களின் நுட்பமான உணர்வுகளையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது வீட்டு அலங்காரம். வெளிநாடுகளில் எல்லாம் மக்கள் இன்டீரியர் என்னும் ஒன்றுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிப்பதுண்டு, இதன் மூலம் அவர்களின் ரசனையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இருப்பதால், எல்லோருமே இப்போது வீட்டின் உள்அலங்காரத்தில் மிகுந்த கவனம் செலுத்தத்தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், இன்டீரியர் என்னும் ஒன்றுக்கு நம்முடைய தமிழகம் அன்றிலிருந்து இன்றுவரை முக்கியப்பங்கினை வகித்துவருகிறது. இன்றும் நாம் காரைக்குடி பக்கம் சென்றால், அவர்களின் இன்டீரியரின் நுட்பத்தை கட்டிடக்கலையிலேயே செதுக்கியிருப்பார்கள். ஆனால், இன்று நாம் அந்தளவிற்கு வீடுகள் கட்ட முடியவில்லை என்றாலும், வீட்டை அழகாக வைக்க வேண்டுமென்பது எல்லோரின் விரும்பமாக இருக்கிறது. இதனால், தற்சமயம் இன்டீரியர் டெக்கரேஷன் என்பது எல்லோராலும் கவனிக்கப்படும் அத்தியாவசியமாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஆனால், இன்று, இன்டீரியர் செய்ய மக்கள் விருப்பம் காட்டுவது ஒருபுறம் இருந்தாலும் யாரை இது தொடர்பாக சந்திப்பது, சென்னை, பெங்களுரூ போன்ற பெருநகரங்களை நாடினால் இதற்கான விலையும் அதிகரிக்கும் அத்தோடு செய்யப்பட்ட வேலைகளில் ஏதேனும் பிரச்சனையிருந்தால், அவர்கள் சேவைப்புரிவார்களா என்கிற குழப்பமும் மக்களிடையில் நிலவி வருகிறது. இன்றைய சூழலில் இன்டீரியர் என்பது எந்தளவிற்கு அத்தியாவசியமாகவும், தேவையுள்ளதாகவும் இருக்கிறது என்பதை பற்றி அறிந்துக்கொள்ள மதுரையில் பல ஆண்டுகளாக இன்டீரியர்ஸ் தொடர்பான பொருட்களையும், அது தொடர்பான கலந்தாய்வுகளும் மக்களுக்கு சிறப்பான முறையில் அளித்துவரும் வால் ஆர்ட் நிறுவனத்தின் மேலாளர் திரு.கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபொழுது:

‘புது வீடு வாங்குபவர்கள் மட்டுமல்ல... வீட்டை புதுப்பிப்பவர்கள், அழகுபடுத்த நினைப்பவர்கள், அலுவலகங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்கள், பள்ளிக்கூடங்கள், நகைக்கடைகள், ஆஸ்பத்திரிகள் என எல்லையில்லாமல் இன்று இன்டீரியர்ஸ் நுழைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இன்று சிறிய பஜ்ஜெட்களில் மக்களில் வீடுகளை கட்ட செலவளித்துவிட்டு, இன்டீரியர்க்கான அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள்.

வீட்டைப் போலவே இன்று அலுவலகங்களுக்கும் தொழிற்சார்ந்த முறையில் இன்டீரியர்ஸின் தேவை அதிகமாக இருக்கிறது. இன்று நம்முடைய வியாபார நோக்கத்தோடு நம்மை தேடி வருபவர்கள் நம்முடைய அலுவலகத்தின் நிலையினைக் கொண்டே கணித்து விடுவார்கள்.

இன்டீரியரைப் பொருத்தவரையில் அது நம்முடைய கிரியேட்டிவிட்டிக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும் தன்மை கொண்டது. எனவே, அதை நாம் ஒரு வட்டத்திற்குள் அடக்கி வைத்திட முடியாது. சுவர்களுக்கு ஏற்ற வண்ணங்களில் பெயிண்ட்ங் செய்வது, வண்ணத்திற்கு ஏற்ற திரைச்சீலைகள், கட்டில், சோபா விரிப்புகள் போன்றவற்றைத் தைத்துக்கொடுப்பது, அறைக்கு அழகு சேர்க்கும் விதமாக பூ ஜாடிகள், அலங்கார சுவர் ஓவியங்கள், சின்னச் சின்ன ஸ்டாண்ட்கள் போன்றவற்றை அமைத்துக் கொடுப்பது, முக்கியமாக மிகவும் பயனுள்ள வகையில் சமையலறையை உருவாக்கிக் கொடுப்பது என்று எல்லாமே இன்டீரியர் டிஸைனிங்தான்.

இன்டீரியரில் தற்போது பெயிண்டிங் செய்வதைக் காட்டிலும் வால்பேப்பர்கள் ஒட்டுவதே சிறப்பாக இருக்கிறது. பொதுவாக, வால்பேப்பர் என்றாலே கிழிந்துவிடும் என மக்கள் என்னுவதுண்டு, ஆனால், இவை பிவிசி கோட்டிங் செய்யப்பட்ட வால்பேப்பர்கள் என்பதால், எளிதில் கிழியாது மேலும், இவற்றை நாம் வாசும் செய்யலாம். அத்தோடு கலர் மங்காது என நாங்கள் 15 ஆண்டுகள் கேரண்டி அளிக்கிறோம். இந்த வால்பேப்பர்களின் ஒரு சிறப்பம்சமாக மக்கள் விரும்பும் படங்களை மக்கள் விரும்பும் அளவில் தயார் செய்து கொடுக்கிறோம்.
தொடர்புக்கு: 9940114290

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top