மதுரையை அசத்திய கலாச்சார ஆடைகளைக் கொண்ட ஃபேஷன் ஷோ!

மதுரையை அசத்திய கலாச்சார ஆடைகளைக் கொண்ட ஃபேஷன் ஷோ!

ஃபேஷன் ஷோ என்றால் அது ஏதோ வெளிநாடுகளில் நீச்சல் உடை அழகிகளால் நடத்தப்படுவது என்றுதான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். வீட்டு கேபிள் டிவியில் சேனல் மாற்றும்போது தெரியாம ஃபேஷன் சேனல் பக்கம் போய்ட்டா அந்த வீட்டில் உள்ள நபர் நிலை அதோகதிதான். அந்தளவிற்கு ஃபேஷன் ஷோ பற்றின தவறான கருத்து வலம் வருகிறது. இந்த நிலையை மாற்றத்தான் மதுரை கேட்வே தாஜில் நடந்தது ஒரு அட்டகாசமான கலாச்சார ஆடைகளைக் கொண்ட ஃபேஷன் ஷோ.

சென்னையைச் சேர்ந்த ஓ2 எண்டர்டெய்ண்மென்ட் நிறுவனம் நடத்திய இந்த மதுரை ஃபேஷன் வீக் 2017 -யை விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனாவின் தொகுப்போடு, பெங்களுரூ, மும்பை போன்ற பெருநகரங்களின் மாடல் அழகிகளின் அணிவகுப்பில் பளிச்சிடும் வண்ண விளக்குகளின் ஊடாக சென்னையைச் சேர்ந்த டிசைனர் தீபா பிள்ளையின் கலாச்சார ஆடைகளின் அணிவகுப்போடு துவங்கியது. சுமார் இருபத்தி நான்கிற்கும் மேலான காக்ரா, லெஹங்கா, காண்போரை ஆழத்திய பளிச்சிடும் எம்ப்ராயட்ரி வேலைப்பாடுகள் கொண்ட சோலி, சல்வார் மற்றும் சேலைகள் இடம் பெற்றிருந்தன. 

அதனைத் தொடர்ந்து ’ இந்திய-மேற்கத்திய கலாச்சாரம் கலந்த ஆடைகளை மிகவும் பிரத்யேகமாக கலம்காரி என்னும் ஒருவகையான ஆடையில் அரங்கேற்றினர் சாய் சுபிக்ஷா. கலம்காரி என்பது இந்தியாவில் ஒரு தனிச்சிறப்பு பெற்ற ஒருவகையான துணி. அதிகமான ஓவியங்கள், அழகான வண்ணங்கள், ஒவ்வொரு ஆடையும் ஒரு கதை செல்லும் அளவிற்கு அவைகள் வடிவமைக்கப்பட்டு அசத்தின.

ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அந்தந்த சுற்றினை முடித்துவைக்க பிரபல நட்சத்திரங்களால் அந்த மேடை அலங்கரிக்கப்பட்டது. ‘என்னை அறிந்தால்’ திரைப்பட புகழ் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திடைப்படத்தின் கதாநாயகி பார்வதி நாயர் பாரம்பரிய ஆடைகளின் அணிவகுப்பை தம்முடைய கவர்ச்சியான அழகின் உச்சத்தில் நிறைவேற்றினார். கண்ணால் யாவும் நோக்கிட, கண்ணால் பேசும் பெண்ணாக ‘விண்மீன் விதையில்..என்னும் பாடல் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட ‘தெகிடி’, ’அதே கண்கள்’ திரைப்படத்தின் நாயகி ஜனனி ஐயர், மதுரையின் மீது அவர் கொண்டிருக்கும் பிரியத்தையும், இட்லி, மல்லிப்பூவின் பெருமையையும் மணம் வீச வைத்துவிட்டார்.

நடிகர் சாந்தனு பாக்கிய ராஜ், நடிகை சிருஷ்டி டாங்கே தங்களின் முப்பரிமாணம் திரைப்படத்தின் முன்னோட்டத்திற்காக கலந்துகொண்டு கலகல மேடையாக நிகழ்வினை மாற்றிவிட்டனர். திரைக்கதை என்றால் பாக்கியராஜ் என்பது போல இன்று நடனம் என்றால் சாந்தனு பாக்கியராஜ் என்கிற ஒரு புகழை ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படத்தில் ‘டமுகா ட்லான்’ என்னும் ஒரே ஒரு பாடலில் நிரூபித்துவிட்டார். மேகா, வில் அம்பு, ஜித்தன்-2, அச்சமின்றி போன்ற திரைப்படங்களின் நாயகியாக வலம் வந்த சிருஷ்டி டாங்கே ரேம்பில் நடத்து அழகூட்டினார். ‘மதுரை என்றாலே உணவும் மக்களின் நல் உள்ளங்களும் தான், எப்போதெல்லாம் நான் மதுரை வருகிறேனோ அப்போதெல்லாம் ஜிகர்தண்டாவை நான் மறந்ததில்லை’ என்று சொல்ல விசில்கள் பறந்தது.

மிகவும் நேர்த்தியான முறையில் செய்யப்பட்ட தங்கம், வைரம், பிளாட்டினம் ஆபரணங்களைக் கொண்டு துவங்கிய ஒரு பிரத்யேகமான ஒரு ஷோவை ஜூவல் ஒன் நிறுவனம் நடத்தியது. கோவை-யை தலைமையகமாக கொண்டிருக்கும் ஜூவல் ஒன்னின் அழகிய நகைகள் மாடல் அழகிகளின் அழகிற்கு அழகு சேர்த்தது.

அதனைத்தொடர்ந்து விஷால் டி மாலில் இயங்கிவரும் அப்ரான்ஜி சில்கஸின் அதிக வேலைப்பாடுகளைக் கொண்ட விலையுயர்ந்த கான்ஜாவரம், பணாரஸ் பட்டு புடவைகளின் அணி வகுப்பு. நிகழ்வின் இறுதியாக ஷோவின் டைடில் ஸ்பான்சர் போத்தீஸ் நிறுவனம் வடஇந்திய பாரம்பரிய ஆடைகளாக குர்தா, ஷர்வாணி பெண்களுக்காக மணப்பெண் சேலைகள் என தெறிக்கவிட்டனர்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top