தீபாவளியை ஓம் சரவணா பேப்ரிக்ஸின் அற்புத ஆடைகளுடன் கொண்டாடுங்கள்!!

தீபாவளியை ஓம் சரவணா பேப்ரிக்ஸின் அற்புத ஆடைகளுடன் கொண்டாடுங்கள்!!

புத்தாடை இல்லாத ஒரு தீபாவளியா? நிச்சயம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அத்தோடு ஒவ்வொரு தீபாவளியையும், புதுப்புது ஆடை ரகங்களுடன் கொண்டாட வேண்டும் என்பது ஒவ்வொருவரதும் ஆசை.

இன்றைய சூழலில் எந்தவகையான பேஃஷன் இளைஞர் மத்தியில் ஹைடெக் மற்றும் பேஃஷனில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற கேள்விகளை முன்நிறுத்தி, தலைமுறை தலைமுறையாக ஆடை துறையில் சிறப்பான முறையில் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்து வரும் ஓம் முருகா குரூப் ஆஃப் கம்பெனிஸில் மொத்த வியாபாரம் செய்து வரும் ஓம் சரவணா பேப்ரிக்ஸின் உரிமையாளர் திரு. முத்து அவர்களை சந்தித்தோம்.

* இந்த தீபாவளிக்கு எந்த மாதிரியான ஆடைகள் அதிகம் விரும்பப்படுகிறது?

தற்போது லெனின் சர்ட்ஸ் தான் ட்ரெண்ட். அத்தோடு அதிகம் ப்ளேன் டிசைன்கள்தான் இன்றைய பேஷன். பேஃஷன் பொருத்தவரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ட்ரெண்ட் மாறிக்கொண்டே வரும். இதுவரை கட்டம்போட்ட சட்டைகள் இருந்துவந்தது. இந்த லெனின் துணிகள் கொஞ்சம் காட்டன் போலவேதான் இருக்கும். இதிலே இன்று பிரிண்ட் சர்ட்ஸ், சைனீஸ் காலர் கிடைக்கிறது.

* ஓம் முருகா குழுமம் என்பது மதுரையில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ள ஒரு ஜவுளி நிறுவனம், இந்த வளர்ச்சியைப் பற்றி..
இந்தியாவில் முதலும் முக்கியமானதும் விவசாயம், விவசாயத்திற்கு அடுத்து ஜவுளிதான் மிகப்பெரிய ஒரு தொழில். நாங்கள் நெசவாளர் குடும்பம். கைத்தறி எப்போதும் எங்கள் வீட்டில் ஓடிக்கொண்டே இருக்கும். எங்களுக்கு ஜவுளித் துறையில் நல்ல ஒரு அனுபவம் இருந்தபடியால் நாங்களே சொந்தமான தொழிலைத் துவங்கினோம்.
1989ஆம் ஆண்டு என் தந்தையின் காலத்தில் நானும் என் சகோதரர்களுமாக பத்துக்குப்பத்து என்ற ஒரு சின்ன இடத்தில் ஆரம்பித்ததுதான் ஓம் முருகா டெக்ஸ்டைல்ஸ். சிறிய அளவில் என்றாலும் மொத்த வியாபாரமாகத்தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம். உயர்ந்த தரம், குறைந்த விலை என்ற கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்ததனால் நிறுவனம் வேகமாக வளரத்தொடங்கியது.

* தீபாவளிககு ஓம் சரவணாவில் கிடைக்கும் சலுகை பற்றி..
ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக் கொள்ளும் தினமாம் தீபாவளியில் மக்கள் பலகாரங்களையும், இனிப்பு வகைகளையும் பரிமாறிக் கொள்வதுண்டு. எனவே, நாங்கள் புதுமையாக கிப்ட் சர்ட் மற்றும் பேண்ட் அறிமுகப்படுத்தியுள்ளோம். இது 150 ரூபாய் தொடங்கி 500 ரூபாய் வரை கிடைக்கிறது. இது தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கஸ்டமைசெஷனோடு செய்தும் கொடுக்கிறோம்.

* இன்று ஆன்லைன் பர்செஸ் மீதான மோகம் அதிகம் உள்ளதே, ஆடை தொழில் பொருத்தவரை அது வெற்றியா?
ஆன்-லைன் தான் இனி எதிர்காலமாக இருக்கப்போகிறது. இன்று வீட்டு பலசரக்கு பொருட்கள் கூட ஆன்-லைன்  விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால், ஆடை பொருத்தவரையில் சற்று சிந்தித்துதான் செயல்பட வேண்டும். காரணம் நம்மால் மெட்டிரியலை பற்றி அறிந்துகொள்ள முடியாது. அத்தோடு டிஸ்ப்ளேவில் தெரியும் வண்ணத்திற்கும், வாங்கிய ஆடையின் வண்ணத்திற்கும் அதிகப்படியான வித்தியாசத்தை காணமுடியும். அப்படி ஆன்-லைன்னில்தான் வாங்க வேண்டுமென்றால் நாம் அந்த ஆடையின் மெட்டிரியல் பற்றி ஏதே ம் விபரம் கிடைத்தால் அதைப்பார்த்து வாங்க வேண்டும்.’ என கூறினார்.

எந்தவொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் அந்த நிறு வனத்தின் மீதான உரிமையாளர்களின் நம்பிக்கையும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் அவசியம். அவ்வாறு வாடிக்கையாளர்கள் நம் மீது வைத்த நம்பிக்கையால், ஓம் முருகா டெக்ஸ்டைல்ஸ் குழுமத்திலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென்று பிரத்தியேகமாக ஓம் முருகா சாரீஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தோம்.

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top