தமிழ் ததும்பும் பாரதியார் பூங்கா!

தமிழ் ததும்பும் பாரதியார் பூங்கா!

தமிழ் என்றால் சட்டென நம் நினைவிற்கு வருவது மதுரை. சங்கம் வைத்த தமிழ் வளர்த்த பெருமை மதுரையையே சேரும். மதுரைக்கு அடுத்தப்படியாக தமிழ் என்றால் நம் நினைவிற்கு வருவது முன்டாசு கவிஞன். ஆம்! தமிழுக்காக தம்முடைய ஒவ்வொரு மூச்சையும் சுவாசித்த முன்டாசு கவிஞன் சுப்பிரமணிய பாரதியார், மதுரையில் பணியாற்றிய பெருமையும் ஒன்று உண்டு. எனினும் இன்றைய தலைமுறைக்கு பாரதியை ஒரு கவிஞர், ஒரு விடுதலைப் போராட்ட வீரர், ஒரு ஆசிரியர் என்பதைத் தவிர வேறு ஏதும் அதிகம் அறிந்திடவில்லை. இனி அந்த நிலை நமக்கு இருக்காது.. காரணம் நமக்காக தான் மதுரை மாநகராட்சி அவுட் போஸ்ட்டில் உள்ள பாரதியார் பூங்காவிற்கு புத்துயிர் அளித்துள்ளது. பல வண்ணப் படங்கள், பாரதியின் கவிதைகள் என முழுக்க முழுக்க பாரதியை மீட்டெடுத்துள்ளனர். இதில் முக்கிய பங்கை வகித்த ஓவியர் திரு. பிஸ்வஜித் அவர்களுடன் ஒரு சந்திப்பு.

உங்களைப் பற்றி..

நான் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன்,கார்டூனிஸ்ட். கடந்த 30 ஆண்டுகளாக நான் சென்னையில் வசித்து வந்தாலும் என்னுடைய சொந்த ஊர் மதுரைதான். தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு மதுரைக்கு வந்திருக்கிறேன். 

பூங்காவில் படம் வரை வந்த வாய்ப்பினைப் பற்றி..

மதுரையில் ஒரு பூங்காவில் படம் வரையவேண்டுமென என நண்பர் மூலமாக அழைப்பு வந்தது. நான் மதுரையை சார்ந்தவன் என்றாலும், மதுரையில் எந்த ஒரு ஓவியமும் வரைந்ததில்லை, ஏக்கம் இருந்து வந்தது. பின் மதுரைக்கு வந்து முன்னால் மாவட்ட ஆணையர் திரு. சந்தீப் நந்தூரி அவர்களை சந்தித்தேன். அவர்கள் பாரதியார் சார்ந்த விஷயங்களை கொண்டு வடிவமைக்கும்படி கூறினார். நான் பிறந்து வளர்ந்த ஊர் என்பனாலும், பாரதியாரைப் பற்றி மக்களிடம் எடுத்துச் செல்வதினாலும் தட்டிக்கழிக்காமல் உடனே ஒப்புக்கொண்டேன்.

இந்த பூங்காவை வடிவமைத்தது பற்றி..

சிறு வயதுகளில் என்னுடைய பள்ளிக்கு நான் இந்த பூங்காவைத் தான் கடந்து செல்வதுண்டு, எனினும் இதை நான் அன்று பார்த்தே இல்லை. அந்தளவிற்கு இருள் சூழ்ந்த நிலையில் இருந்தது. எனவே, முதலில் இந்த இருள் நீக்கப்பட வேண்டும். மேலும்,பாரதியாரை பெரியதளவில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் பாரதியார் என்னவெல்லாம் செய்தார் என்பதைப் பற்றி மக்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை. எனவே, சுமார் இரண்டாண்டு காலம் ஒரு சில ஆய்வுகள் மேற்கொண்டு எந்த வாசகங்கள், என்ன படங்கள் வரையப் போகிறேமென்பதை தேர்வு செய்தேன். அத்தோடு இன்று வளர்ந்து வரும் இளம்தலைமுறையினரிடம் பாரதியாரை கொண்டுப் போய் சேர்க்க வேண்டுமென்பதற்காக பளிச்சிடும் வண்ணங்களைக் கொண்டு இங்கு வரைந்திருக்கிறேன்.

இந்த பணிகளை செய்து முடிக்க எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது?

தொடக்கத்தில் இந்த பூங்காவை முழுவதும் அளந்துக் கொண்டு  பின் நான் என்னும் உதவியாளர்கள் 3 பேர் இணைந்து இதை பத்து நாட்களில் முடித்தோம். 

இன்றைய தலைமுறைக்கு இந்த பூங்கா எப்படி இருக்கும்??

இந்த பூங்காவை நான் ஒரு புத்தகமாகவே கருதிதான் பணிகளை செய்தேன். ஒரு புத்தகத்தைப் போலவே இதன் வெளிப்புறம் பல வண்ணங்களைக் கொண்டதாகவும், உட்புறம் பாரதியாரின் கவிதைகள், அவரின் வாழ்க்கை என பாரதியைப் பற்றி அறிந்துக்கொள்ளும் ஒரு இடமாகவும் இருக்கும். எனக்கும் கூட பாரதியைப் பற்றி தெரியாத பல புதிய விஷயங்கள் கடந்த மூன்று மாதத்தில் அதிகம் அறிந்துக்கொண்டேன். நிச்சயம் இந்த பூங்கா பாரதியின் கவிதைகளை இளைஞர்கள் படிக்க தூண்டும். 

உங்களின் பார்வையில் மக்கள் இதை எவ்வாறு பயன்படுத்தலாம்?

இது ஒரு பொதுப் பூங்கா. இதை ஓய்வெடுக்கும் ஒரு இடமாக மற்றும் பயன்படுத்தாமல் காலையில் யோகா செய்ய பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்து பாரதியைப் பற்றியும் அவர் பாடல்களைப் பற்றியும் அவர்களுக்கு கற்பிக்கலாம்.

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top